இறந்து கரை ஒதுங்கிய 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

நியூசிலாந்தின் சாத்தம் தீவு 800-க்கும் குறைவான மக்கள் வசிக்கும் தீவு ஆகும். இத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் ஏராளமான சுறாக்கள் இருப்பதால், இத்தீவு மிகவும் சவாலான பகுதியாகும்.

சாத்தம் தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 250 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, இன்று அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. சுறாக்களின் தாக்குதலினால் இந்தத் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இந்தத் தீவு நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், உயிரிழந்த திமிங்கலங்களின் உடல்கள் கடற்கரையிலேயே விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?

சாத்தம் தீவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது புதிதல்ல. கடந்த மார்ச் மாதம், ஃபேர்வெல் ஸ்பிட் அருகே உள்ள கடற்கரையில் 31 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. கடந்த ஆண்டு, 50-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்  காயங்களுடன் கரை ஒதுங்கிய நிலையில், 28 திமிங்கலங்களை மீட்புக்குழுவினர் காப்பாற்றினர். 

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில், 700-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இதில் 250 திமிங்கலங்கல் உயிரிழந்தன. கடந்த 1918-ம் ஆண்டு அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 

சாத்தம் தீவில் 50 திமிங்கலங்கள் வரை கரை ஒதுங்குவது மிக சாதாரண நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதற்கான தெளிவான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் இதுவரை கண்டறிய இயலவில்லை. உணவுக்காக கரைக்கு அருகில் வரும்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் படிக்க | ‘எங்களை அழிக்க முயற்சி’ – உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.