தற்போதைய பலத்த மழையுடனான கால நிலை மேலும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

 2022 ஒக்டோபர்16ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2022ஒக்டோபர்15ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

வெப்பவலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வடஅரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசுகின்றகாற்று ஒன்றிணையும் பிரதேசம்)  தாக்கம்காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. சிலஇடங்களில் 75 மி.மீ க்கும்அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு  பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.