சட்டக்கல்லூரியின் கற்கை மொழி பற்றிய தீர்மானம் விரைவில் – நீதி அமைச்சர்

சட்டக் கல்லூரியில் கற்கை மொழியான ஆங்கில மொழியை மாற்றுவது தொடர்பில்; சட்ட கல்விப்; பேரவையுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுப்பதற்கு வாய்ப்புத் தருமாறு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச நேற்று (19) பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

சட்டக்கல்லூரியில் மாணவர்களின் ஆங்கில மொழியை கற்கை மொழியாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் சிரமத்திற் உள்ளாவதாகவும் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே

கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அரச மற்றும் எதிர் தரப்பு விவாதங்களுக்கும் பதிலளித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் உண்மையானவை என்றும் தெரிவித்த அமைச்சர்

நீதி அமைச்சராக மட்டும் தனியாக மொழிப் பிரகடனத்தைத் தீர்மானிக்க முடியாது. சட்ட கல்விப் பேரவையின் இணக்கப்பாட்டுடன் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அதாவது பெரும்பாலும் சட்டக்கல்வியை வெளியில் கற்று வந்;தவர்கள் அன்றி, போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு உள்வாங்கப்பட்ட மாணவர் குழாம் அடிக்கடி பரீட்சை மொழியை ஆங்கிலம் அன்றி தாய்மொழிக்கு மாற்றித் தருமாறு கோரிக்கை விடுக்கிறார்கள்.

அத்துடன் அவர்களுக்கு ஆங்கில மொழியைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறும் மாணவர்கள் பரீட்சையின் போது வினாக்களுக்கு விடையளிப்பது அவர்களுக்கு இயலாது உள்ளது என்றும் அவ்வாறே பரீட்சையில் சித்தியடையாவிட்டால் சட்டத் தொழிலுக்கு வரும் வாய்ப்பு அத்துடன் நிறுத்தப்படுகிறது. இது அவர்களின் கல்வியை சீர்குழைத்து விடும் என்று அச்சப்படுவதாகவும் கூறுகிறார்கள் என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய வெளிநாட்டு அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி:

Ali sabri law college 19 10 2022கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள் சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் போது அங்கிலத்தைப் படித்;து, ஆங்கிலத்தில் பேசக் கூடிய சட்டத்தரணிகளாக உருவாக்க நாம் ஊக்கப்படுத்தினோம்.

சிங்களத்தில் படித்து கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் தாய் மொழியில் மாத்திரம் படிப்பதால் இரு தடவைகளில் சட்டத்தரணியாக உருவாகுகிறார்கள்;.

‘இதனால் ஆங்கிலம் பேச முடியுமான சட்டத்தரணிகளைப் போல் ஆங்கிலம் பேசத் தெரியாத சட்டத்தரணியாக உருவாகுகிறார்கள். சிலருக்கு ஆங்கிலத்தை உயர் சாதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டும். இது தவறானது. நமது பிள்ளைகள் நாம் அமெரிக்காவிற்குச்; செல்கிறோம். இந்தப் பிள்ளைகளை சிங்களத்தில் படித்து வெளியாக்குகிறோம். இந்தியாவில் ஆங்கிலத்தில் மாத்திரம் படித்து சர்வதேச மயப்படுத்தி இருக்கிறார்கள். சட்டக் கல்விப் பேரவை தான் இந்த அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தது. பழைய மாணவர்கள் எங்களுக்கு ஏற்பட்ட அநீதி எங்கள் தம்;பி தங்கைகளுக்கு ஏற்படக் கூடாது, எங்களுக்கு ஆங்கிலம் பேச முடியவில்லை, ஒரு புத்தகம் படிக்க முடியவில்லை, வெளிநாடுகளில் சென்று படிக்க முடியவில்லை என என்னை சந்தித்த போது கோரிக்கை விடுத்தார்கள்’ என அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.