மிரள் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை கொடுத்தவர் பரத். பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்துள்ள மிரள் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சக்திவேல் மிரள் படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.

பரத் மற்றும் வாணி போஜன் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. சென்னையில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் பரத். நீண்ட நாட்களுக்குப் பிறகு மூன்று பேரும் வாணி போஜனின் தந்தை கே எஸ் ரவிக்குமாரை பார்க்க சொந்த ஊருக்கு செல்கின்றனர். அங்கிருந்து கிளம்பி சென்னை வரும் வழியில் ஒருவித அமானுஷ்ய நிகழ்வு ஏற்படுகிறது. அதிலிருந்து மூன்று பேரும் எப்படி தப்பித்தனர் என்பதே மிரள் படத்தின் கதை.

வாணி போஜன் மற்றும் பரத் இருவரும் தங்களது 100 சதவீத நடிப்பை கொடுத்துள்ளனர். படம் முழுக்க இருவருக்கும் தங்களது நடிப்புத் திறனை வெளிக்காட்ட பல காட்சிகள் இருந்தது, அதனை பயன்படுத்தி அவர்களது நடிப்பு திறன்களை வெளிப்படுத்தி உள்ளனர். பரத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மிரள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் படமாக அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் சக்திவேல் திறம்பட மிரள் படத்தை இயக்கி உள்ளார். டெக்னிக்கலாகவும் படம் சிறப்பாக உள்ளது, பல இடங்களில் நம்மை மிரள வைக்கிறது மிரள் படம்.   

இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதையை மையக்கருவாக வைத்து ஒரு அசத்தலான திரில்லர் படத்தை கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர். கே எஸ் ரவிக்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. பிரசாத்தின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. வளர்ந்து வரும் கதாநாயகியான வாணி போஜன் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டது பாராட்டுக்குரியது. மிரள் மிரளவைக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.