அவங்களை பற்றி எனக்கு கவலை இல்லை – ஸ்டாலின்: விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த அதிகனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கின.

போர்க்கால அடிப்படையில் மீட்புபணிகள், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “சீர்காழி பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நேற்று முன் தினமே அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, செந்தில்பாலாஜி ஆகியோரையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறினேன்.

அதுமட்டுமல்லாமல் நானும் நேற்று இரவோடு, இரவாக பாண்டிச்சேரி வந்து இன்று காலை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டேன்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. கலெக்டர் நன்கு பணியாற்றியுள்ளார். மக்கள் நிம்மதியாக உள்ளனர். அவர்களிடம் சில குறைகள் உள்ளன, அவற்றை கேட்டறிந்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஐந்தாறு நாள்களில் எல்லாம் சரிசெய்யப்படும்.

பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவதில் எதிர்கட்சிகள் ஆளுக்கொரு கருத்து கூறிக்கொண்டு வருகிறார்கள். இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாமா என்று பார்த்து வருகின்றனர். எனக்கு அது பற்றி கவலை இல்லை. பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். விரைவில் பயிர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.