சுதந்திர ஊடகத்திற்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன்

சுதந்திர ஊடகத்திற்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் இன்று (28) வெகுஜன ஊடக அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன , அந்த சுதந்திர ஊடகத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க:

2015 ஆம் ஆண்டு நாம் நாட்டைப் பொறுப்பேற்ற போது, ஊடக சுதந்திர சுட்டெண்ணில் 180 நாடுகளில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருந்தது, அப்பொழுது திரு மங்கள சமரவீரவும் ஊடக அமைச்சராக இருந்து போதும் ஊகத்துறையின் வளர்சிக்காக செயல்பட முடிந்தது.

 

சர்வதேச ஊடக சுதந்திர தரப்படுத்தல் சுட்டெண்ணில் 180 நாடுகளில் இலங்கை 165 வது இடத்தில் இருந்தது 126 ஆக இருந்தது, தற்போது அது 145 ஆக வீழ்ச்சிக்கண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.