போதுமான ரன்கள் இல்லை! சாக்குபோக்கு சொல்ல முடியாது.. இந்திய அணி தோல்விக்கு பின் ரோகித் சர்மா


வங்கதேச அணியிடம் இந்திய கிரிக்கெட் அணி முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற நிலையில் அது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

திரில் வெற்றி பெற்ற வங்கதேசம்

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்த நிலையில் இந்தியா 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது.

பின்னர் வங்காளதேச அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

போதுமான ரன்கள் இல்லை! சாக்குபோக்கு சொல்ல முடியாது.. இந்திய அணி தோல்விக்கு பின் ரோகித் சர்மா | Indian Cricket Captain Rohit Sharma Bangladesh

sportskeeda

சாக்குபோக்கும் சொல்ல முடியாது

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 186 ரன்கள் என்பது போதுமான ரன்கள் இல்லை. ஆனால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தோம்.

அதன் மூலம் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நாங்கள் 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை.

இந்த மாதிரியான ஆடுகளங்களில் விளையாடி நாங்கள் பழக்கப்பட்டவர்கள். அதனால் இதற்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது என கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.