மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆல்யா, நடுரோட்டில் லவ் டுடே பாடலுக்கு ஆட்டம்

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறினார்கள். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமான ஆல்யா நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன்பிறகு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் உடல் எடை கூடிய அவர், சட்டென எடையை குறைத்து மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கமிட் ஆனார். அடுத்த சில மாதங்களில் இரண்டாவதாக கர்ப்பமான ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். 

கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா மானசா உடல் எடை கூடி இருக்கிறார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி மக்களிடம் உரையாடிக்கொண்டே தான் இருந்தனர். இதற்கிடையில் சமீபத்தில் ஆல்யா, தான் சீரியலில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார். அந்தவகையில் இவர் தற்போது நடிக்க உள்ள சீரியலின் பெயர் இனியா ஆகும். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது, அத்துடன் இந்த சீரியலை சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த தொடர் இன்று அதாவது திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை ஆல்யா நடுரோட்டில்  குத்தாட்டம் போடும் வீடியோ இன்று வைரலாகி வருகின்றது. இதனை வீடியோவாக எடுத்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.அத்துடன் ரசிகர்கள் ஆல்யாவின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இதற்கிடையில் இனியா நாடகத்தின் படப்பிடிப்பில் தன் தோழியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவும் தற்போது வெகுவாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.