Semiconductor Chip விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்! டாடா உறுதி

இந்தியாவில் பிரபல தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம் விரைவில் இந்தியாவிலேயே செமி கண்டக்டர் சிப் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதற்காக டோக்கியோவை சேர்ந்த Renesas Electronics எனும் நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது வளர்ச்சி பெற்றுவரும்
EV வாகனங்கள் (electric Vehicles)
சந்தையில் நிச்சயம் இந்த SemiConductor chip தயாரிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

இதில் அரசு நிதி உதவியாக 30 பில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்றும் முதலீட்டாளர்கள் மூலமாக 20 பில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று டாடா தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவாக 10 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கூறியுள்ளது.

இதில் உலகத்தரம் வாய்ந்த 28 Nanometer அல்லது 65 Nanometer சிப் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உலகில் தற்போது பெரும்பாலான
Semiconductor Chip தயாரிப்பு
சீனாவிலேயே நடக்கிறது. ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஒரு இடத்தை மட்டுமேசிப் தேவைக்கு நம்பி இருக்கக்கூடாது என்பதை உணர்த்திவிட்டது.

இதனால் அடுத்த மிகப்பெரிய semiconductor சிப் தயாரிப்பு சந்தையாக இந்தியாவை உருவாக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் டாடா நிறுவனம் ஏற்கனவே பேசிவிட்டதாக தெரிகிறது.

வரும் 2027 ஆம் ஆண்டு தற்போது விற்பனையாகும் ICE என்ஜின் வாகனங்களை விட அதிகமாக எலக்ட்ரிக் வாகனகள் விற்பனையாகும் என்று டாடா நிறுவனம் கணித்துள்ளது. அதற்கு முன்னதாகவே இந்த சிப் தயாரிப்பு தொடங்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.