இப்போ திருமணம் செய்யும் எண்ணமில்லை: அஞ்சலி 'எக்ஸ்க்ளூசிவ்'

இந்த பொண்ணு நடிக்குதா… இல்லை நிஜமாகவே அந்த கேரக்டராக மாறிடுச்சா என ஆச்சர்யப்பட்டு ஆஹா, சபாஷ் என கைதட்டி பார்த்து ரசிக்கும் அளவிற்கு காதல், காமெடி, கோபம், சென்டிமென்ட் என துறுதுறுவென திரையில் தீயாய் நடித்து ரசிகர்களிடம்'நம்ம வீட்டு பொண்ணு' என பெயர் பெற்ற அஞ்சலி மனம் திறக்கிறார்…

சமீபத்தில் வெளிவந்த 'பால்' வெப் சீரிஸ் பற்றி…
குடும்ப சென்டிமென்ட், எமோஷனல் கதை. இந்த கதை சொன்ன, எடுத்த விதம் பிடித்தது. திவ்யா என்ற கேரக்டரை நல்லா எழுதியிருந்தாங்க.. ரொம்ப தைரியமானா பொண்ணு, மாடியில் இருந்து எப்படி விழுந்தாள் என்பது போன்ற திரில்லர் காட்சிகளும் இருக்கும்.

சித்தார்த் இயக்கத்தில் நடித்த அனுபவம் எப்படி…
ஒரே முறை தான் கதை சொன்னாரு… என் மனதில் ஏறிடுச்சு, அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் எந்த காட்சி எவ்வளவு துாரம் இருக்கணும், என்ன தேவை அப்படிங்கறத தெளிவாக எடுத்தார். முதல் இயக்கம் போல் தெரியலை. அவ்ளோ ஈஸியா எங்களை கையாண்டார்.

வெப் சீரிஸ், சினிமா நடிப்பு வித்தியாசம்… அனுபவம்…
வெப் சீரிஸ் எல்லா தரப்பு மக்களிடமும் சேர்வதால் ரீச் அதிகம். பல மொழிகளில் எடுப்பதால் உலக அளவிலும் சென்று சேர்கிறது. குறைந்தது 7 மொழிகளில் வெளியாகிறது. எனக்கு இது 2வது வெப் சீரிஸ் அனுபவம். நன்றாகவே உள்ளது.

சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களில் நடிப்பது..
'கற்றது தமிழ்' 'எங்கேயும் எப்போதும்', 'அங்காடி தெரு' இப்படி ஆரம்பத்திலேயே நல்ல படங்கள் கிடைத்தது. கடவுளுக்கு நன்றி சொல்றேன். என் நடிப்பை பார்த்து பலரும் இயல்பாக நடிக்கிறிங்கனு சொல்லும் போது சந்தோஷமா இருக்கும்.

இயக்குனர் ராம் உடன் பணியாற்றுவது குறித்து ?
ராம் என் வழிகாட்டி, குரு… அந்த பயணம் 'ஏழு கடல் ஏழு மலை' படம் வரை நல்லா போகுது. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பல விஷயங்களை கற்று கொள்கிறேன்.

உங்கள் திருமணம்? வீட்டில் என்ன சொல்றாங்க ?
வீட்டில் அப்பப்போ எப்போ கல்யாணம் பண்ணிக்குவேன்னு கேட்பாங்க. ஒவ்வொரு முறையும் கையில் இவ்வளவு படங்கள் இருக்குன்னு பெரிய லிஸ்ட் சொல்லுவேன். ஹீரோயின் திருமணம் செய்த பின்பும் நடிக்கலாம் என்ற சூழ்நிலை தான் இருக்கு. ஆனால் இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. கண்டிப்பா எல்லோருக்கும் சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணுவேன்.

உடம்பை கவனிப்பதில் டயர்டு ஆகலலையா ?
கண்டிப்பா டயர்ட் ஆகியிருக்கென்.. படப்பிடிப்பு முடித்து வீடு டூ ஜிம் திரும்ப படப்பிடிப்பு. இது என் வழக்கம். அய்யோ இது முடியலனு சொல்ற அளவு போயிருக்கேன். கொஞ்சம் இல்ல ரொம்ப டயர்ட் ஆனாலும் என்ஜாய் பண்றேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.