வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் 

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (20) திறக்கப்பட்டுள்ளது.

மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக 50 மாணவர்கள் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதோடு தையல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப் பயிற்சி நிலையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வதிவிட பயற்சியினை வழங்கும் நிறுவனமாக தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.