உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற வீரர் மீது பிரான்ஸ் பரபரப்பு புகார்!

கைலியன் எம்பாப்பேவை தொடர்ந்து கேலி செய்வதாக அர்ஜென்டினா வீரர் எமி மார்டினெஸ் மீது பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக புகார் செய்துள்ளது.

அர்ஜென்டினா கோல் கீப்பர்

கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினெஸ், பிரான்ஸின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவை கேலி செய்ய ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, மார்டினெஸ் பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றபோது எம்பாப்பேவின் முகம் பொறித்த பொம்மையை கையில் வைத்தபடி இருந்தார்.

உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற வீரர் மீது பிரான்ஸ் பரபரப்பு புகார்! | France Complaint On Argentina Goal Keeper

பிரான்ஸ் அதிகாரப்பூர்வ புகார்

இந்த விடயம் சர்ச்சையானதைத் தொடர்ந்து தற்போது மார்டினெஸ் மீது பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தனது கருத்துக்களை விளக்க பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் நோயல் லே க்ரேட் முறையான புகார் கடிதத்தை அர்ஜென்டினா பிரதிநிதி கிளாடியோ டாபியாவுக்கு அனுப்பியுள்ளார்.

முன்னதாக, தங்க கையுறையை வென்றபோது மார்டினெஸ் அதனை வைத்து ஆபாச செய்கையில் ஈடுபட்டது சர்ச்சையானது.

அதனைத் தொடர்ந்து அவர் எம்பாப்வேவை கேலி செய்துள்ளார்.

உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற வீரர் மீது பிரான்ஸ் பரபரப்பு புகார்! | France Complaint On Argentina Goal Keeper

ஆனால் எம்பாப்வே அதற்கு எந்த பதிலையும் வழங்காமல், தனது கிளப் அணியான PSG-க்கு பயிற்சி செய்ய ஈடுபட்டார்.

உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற வீரர் மீது பிரான்ஸ் பரபரப்பு புகார்! | France Complaint On Argentina Goal Keeper

உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற வீரர் மீது பிரான்ஸ் பரபரப்பு புகார்! | France Complaint On Argentina Goal Keeper

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.