ஒரு வாரத்திற்குள்… சீனா தொடர்பில் வெளியாகும் புதிய எச்சரிக்கை


ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொடும் என சீன நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலை மிக மோசமாகவே உள்ளது

நாட்டில் கொரோனா தீவிரமடைந்துள்ளதை சீனா உறுதிப்படுத்த மறுத்தாலும், அங்குள்ள நிலை மிக மோசமாகவே உள்ளது என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் உள்ளிட்டவையால் கொரோனா இல்லாத சமூகம் என்ற சீனாவின் கொள்கையை கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு வாரத்திற்குள்... சீனா தொடர்பில் வெளியாகும் புதிய எச்சரிக்கை | China Expecting Peak Covid Cases

@getty

மட்டுமின்றி, தொழிலாளர்கள் நோய்வாய்ப்படுவது அதிகரித்துள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சியும் சரிவடைந்துள்ளது.
சுமார் அரை நூற்றாண்டுக்கு பின்னர் மிக குறைவான வளர்ச்சி விகிதத்தை சீனா பதிவு செய்தது.

டிசம்பர் 22ம் திகதி வெளியான தகவலில் புதிதாக 4,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று நாட்களில் இறப்பு ஏதும் நிகழ்வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொடும்

ஆனால் மருத்துவ நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் ஒரு வாரத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொடும் எனவும்,
இதனால் தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும்,

ஒரு வாரத்திற்குள்... சீனா தொடர்பில் வெளியாகும் புதிய எச்சரிக்கை | China Expecting Peak Covid Cases

@getty

இதன் காரணமாக ஒட்டுமொத்த மருத்துவத்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த புதிய அலையானது இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரித்தானிய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழலில் சீனாவில் நாளுக்கு 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் எனவும், இறப்பு எண்ணிக்கை நாளுக்கு 5,000 தாண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வாரத்திற்குள்... சீனா தொடர்பில் வெளியாகும் புதிய எச்சரிக்கை | China Expecting Peak Covid Cases

@getty

ஷாங்காய் பகுதியை பொறுத்தமட்டில் அடுத்த வார இறுதிக்குள் 25 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா இறப்புகளை சீனா எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.