புதிய வகை கரோனா : மீண்டும் அமலுக்கு வரும் பாதுகாப்பு நடைமுறைகள்… என்னென்ன தெரியுமா?

சீனாவில் BF7 புதிய வகை கொரோனா தொற்றான வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின்படி தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச. 24) முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலைய உள் வளாகத்திற்குள் வருபவர்களுக்கு 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என சான்று வைத்திருக்கவேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை மீண்டும் நாளை முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்று மருத்துவ பரிசோதனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதில், சென்னை, திருச்சி என அதிகம் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% சத அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இதில் வரும் நோய்களுக்கு பாசிட்டிவ் என தெரிந்தால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் முகவரியில் உள்ள மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

தற்போது விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இல்லையெனில், கொரோனா இல்லை என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. எனவே, கூடுதல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.