திருப்பத்தூர் அருகே, 500 – க்கும் மேலான போட்டிகளில் பங்கேற்ற காளை உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 500கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு காளை திடீரென இறந்தது. சுற்றுவட்டாரத்தில் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அந்த காளைக்கு ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி உள்ளது, தமிழ்நாட்டில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் கிருங்காகோட்டை, மெக்கனிக் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளையை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து செல்வது வழக்கம்.

மதுரை, கோவை, திருப்பூர், தருமபுரி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, என பல்வேறு மாவட்டங்களில் 500கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல வீரர்களை நாச்சி காளை பந்தாடியுள்ளது. லட்ச கணக்கில் பரிசுகளை வென்று கிருங்காகோட்டை கிராமத்திற்க்கே பெயர் பெற்ற அந்த காளை திடிரென இறந்தது, ஊரின் மைய பகுதியில் வைத்து ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.

பட்டு வெட்டி, துண்டு, மாலை, என சகலவிதங்களிலும் நாச்சி கலைக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் சுற்று வட்டார ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமமக்கள், பெண்கள் என பலரும் கண்ணீர் உடன் விடைகொடுக்க உரிமையாளரின் தோட்டத்தின் நாச்சி காளை நல்லடக்கம் செய்ய பட்டது.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.