தம்பி அனில் அம்பானியின் முக்கிய சொத்தை தன்வசப்படுத்திய முகேஷ் அம்பானி! இத்தனை ஆயிரம் கோடியா?


அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானி விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

ஏலத்தில் வாங்கிய முகேஷ் அம்பானி

அதன்படி ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 3 ஆயிரத்து 720 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
வாராக்கடன்கள் காரணமாக, அனில் அம்பானியின் அனைத்து நிறுவனங்களும் திவால் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

43 ஆயிரத்து 500 செல்போன் டவர்களும், 1.70 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஃபைபர் ஆப்டிக் வலை பின்னலும் கொண்ட ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது.

தம்பி அனில் அம்பானியின் முக்கிய சொத்தை தன்வசப்படுத்திய முகேஷ் அம்பானி! இத்தனை ஆயிரம் கோடியா? | Mukesh Ambani Buys Brother Anil Company

AP

 மொபைல் டவர் மற்றும் ஃபைபர் 

முன்னதாக நவம்பர் மாதம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லை கையகப்படுத்த RPPMSL க்கு அனுமதி வழங்கியது.

அதன்பிறகு, ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லின் மொபைல் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்களை வாங்குவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3,720 கோடி ரூபாய் தொகையை எஸ்பிஐ எஸ்க்ரோ கணக்கில் டெபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.