"அமாவசையில் உதயநிதியை அமைச்சராக்கியதே திமுகவின் சாதனை" – அதிமுக விமர்சனம்

திமுக ஆட்சி பொறுப்பேற்று, இருபது அமாவாசையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக பதவில் அமர வைத்ததே, திமுகவினரின் சாதனை என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுப் பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க. கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார்.
இந்த விழாவின்போது பேசிய அவர், திமுக கட்சி ஆட்சி பொறுப்பேற்று இருபது அமாவாசை ஆன நிலையில், அவர்கள் செய்த சாதனை என்னவெனில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக பதவியில் அமர வைத்தது மட்டும்தான் எனவும், உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சர் பதவியைப் பற்றி எதுவும் தெரியாது என விமர்சித்தார்.
image
அ.தி.மு.க.வின் பத்து ஆண்டுகால ஆட்சியில் எவ்வித வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை எனவும், தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, பால், மின்சாரக் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து இருப்பதாகவும், அதனைக் குறைப்பதற்கு தி.மு.க. அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலகங்களில் நாள்தோறும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.