உதயநிதிக்கு வந்த அசைன்மென்ட்; கொங்கு மண்டலத்தில் வேற லெவல் பிளான்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல். காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா-வின் திடீர் மறைவை யாருமே எதிர்பார்க்கவில்லை. இழப்பில் இருந்து மீள்வதற்கு இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் வந்துவிட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சீட் ஒதுக்கப்பட்டு விட்டது.

வேட்பாளர் யார்?அடுத்து வேட்பாளர் தேர்வு. திருமகன் ஈவேரா-வின் இழப்பால் அவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கே சீட் கிடைக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபட்டது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அல்லது இளைய மகன் சஞ்சய் சம்பத் ஆகியோரில் ஒருவர் தான் என கிட்டதட்ட உறுதியானது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிவிப்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் வேட்பாளர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

களமிறங்கிய திமுகஅடுத்து பிரச்சாரக் களம். போட்டியிடுவது காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும். பிரச்சாரத்தில் நாங்கள் தான் என திமுக முந்திக் கொண்டது. அமைச்சர் கே.என்.நேரு தனது முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். பூத் கமிட்டி அமைப்பது முதல் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது வரை அனைத்தும் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளனர்.

உதயநிதிக்கு அசைன்மென்ட்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை பெற்று தரும் முக்கியமான அசைன்மென்ட் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளதாம். அதுவும் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமாம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா 67,300 வாக்குகள் (44.27 சதவீதம்) பெற்று வெற்றி வாகை சூடினார்.
வாக்குப்பதிவு நிலவரம்இரண்டாம் இடம் பிடித்த தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜா 58,396 வாக்குகள் (38.41 சதவீதம்) பெற்றார். வாக்கு வித்தியாசம் 8,904. இது மிகவும் குறைவான வாக்கு வித்தியாசம் என அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என உதயநிதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் ஈரோடு பயணம்அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட முதல் அசைன்மென்ட் என்பதால் மிகவும் கவனமாக காய்களை நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகள், விழாக்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விசிட் அடிப்பார் எனத் தெரிகிறது.

எய்ம்ஸ் செங்கல்ஏற்கனவே 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்தார். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டிய செங்கலை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தது பேசுபொருளாக மாறியது. மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் முக்கிய பங்காற்றியது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்தற்போது அரசியல் ரீதியாக அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் உதயநிதி ஸ்டாலின் வேற லெவலுக்கு செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.