இறந்துபோன கணவர்… இந்திய உணவகம் ஒன்றில் அடையாளம் கண்டு ஸ்தம்பித்த பெண்


பிரித்தானியாவில் உள்ளூர் இந்திய உணவகம் வெளியிட்ட விளம்பர காணொளியில் பெண் ஒருவர் தமது இறந்துபோன கணவரை அடையாளம் கண்டு ஸ்தம்பித்துப் போயுள்ளார்.

9 ஆண்டுகளுக்கு முன்னர் மரணம்

குறித்த தகவலை அவர் சமூக ஊடகத்திலும் பதிவிட்டு, இணையவாசிகளை குழப்பமடையவும் செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன்னர், 2014ல் மரணமடைந்துள்ளார்.

இறந்துபோன கணவர்... இந்திய உணவகம் ஒன்றில் அடையாளம் கண்டு ஸ்தம்பித்த பெண் | Late Husband Dining Indian Restaurant Woman Spots

Image: Spice Cottage

இந்த நிலையில் தான், மேற்கு சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள Spice Cottage என்ற இந்திய உணவகம் வெளியிட்ட விளம்பர காணொளியில் தமது மகனுடன் கணவரும் உணவருந்துவதாக அந்த பெண் அடையாளம் கண்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த காணொளியானது எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வியும் அவர் எழுப்பியுள்ளார்.
ஜனவரி 16ம் திகதி வெளியிடப்பட்ட அந்த காணொளியுடன், புத்தாண்டு, புதிய உணர்வு, தங்கள் உணவகத்தில் உணவருந்துவோரின் அனுபவங்களை மறக்கமுடியாதபடி மாற்றுவதற்காக கடந்த சில வாரங்களாக தாங்கள் உழைத்து வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அடையாளம் கண்ட பெண்

இந்த நிலையில் தான் லூசி வாட்சன் என்ற பெண்மணி தமது கணவரையும் மகனையும் உணவருந்துவோரின் கூட்டத்தில் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இறந்துபோன கணவர்... இந்திய உணவகம் ஒன்றில் அடையாளம் கண்டு ஸ்தம்பித்த பெண் | Late Husband Dining Indian Restaurant Woman Spots

Image: Spice Cottage

உணவகங்கள் தங்கள் விளம்பரத்திற்காக முன்னர் பதிவு செய்த காணொளியை பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், குறித்த இந்திய உனவகமானது, தொடர்புடைய காணொளியை இந்த மாத தொடக்கத்தில் பதிவு செய்தாகவே குறிப்பிட்டுள்ளது.

இதையே, லூசி வாட்சனுக்கும் பதிலாக கூறியுள்ளது. ஆனால் அதன் பின்னர் லூசி வட்சன் பதிலேதும் பதிவு செய்யவில்லை.
இருந்தபோதும், இணையவாசிகள் இந்த சம்பவத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதை அறிய ஆவல் தெரிவித்து வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.