Pathu Thala: 'பத்து தல' படத்தின் வெறித்தனமான அப்டேட்: மாஸ் காட்டும் சிம்பு.!

அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தை கலக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க கமிட் ஆனார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் துவங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார்.

Suriya 42: அடேங்கப்பா.. சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘சீதா ராமம்’ நடிகை..!

அதன்பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக நரதன் இந்தப்படத்தில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். ‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Pathaan Collection: வசூலில் உச்சத்தை தொட்ட ஷாருக்கானின் ‘பதான்’: வாயை பிளக்கும் திரையுலகம்.!

இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ‘பத்து தல’ படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.