AK 62: உதயநிதியின் உதவியால் AK62 வாய்ப்பை தட்டி தூக்கிய இயக்குனர்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அதை ஈடு காட்டும் வகையில் துணிவு படத்தின் வெற்றி அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

சமூக கருத்தோடு கூடிய ஒரு சிறப்பான படமாக அமைந்த துணிவு படத்தை ரசிகர்கள் திரையில் கொண்டாடினார்கள். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற துணிவு படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்க இருந்தார்.

Thalapathy 67: விஜய் விஷயத்துல நான் பண்ண ஒரே தப்பு இதுதான்..ஓப்பனாக பேசிய SAC ..!

ஆனால் கடந்த சில தினங்களாக AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை என்பதால் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

இவருக்கு பதில் AK62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கப்போகின்றார் என்று பேசப்பட்டு வருகின்றது. தடையற தாக்க, தடம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் AK62 பட வாய்ப்பை உதயநிதியின் உதவியால் பெற்றுள்ளார் எனவும் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.

அதாவது உதயநிதி நாயகனாக நடித்த கலகத்தலைவன் படத்தை மகிழ் திருமேனி இயக்கியபோது அவருக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் செண்பகமூர்த்திக்கும் நல்ல பழக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே செண்பகமூர்த்தி லைக்கவிடம் மகிழ் திருமேனியை பரிந்துரைக்கவே அஜித்திடம் கதை சொல்லும் வாய்ப்பை மகிழ் பெற்றதாக தகவல்கள் வருகின்றன. அவர் கூறிய கதை அஜித்திற்கு பிடித்துப்போக உடனடியாக மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்க அஜித் சம்மதித்ததாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த தகவல் எல்லாம் உண்மையா இல்லை வதந்தியா என அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.