Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

பட்ஜெட் 2023: நாளை, அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த நிலையில், ஊதியம் பெறும் வகுப்பினருக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்திலிருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சில வேறுபட்ட வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்காக பட்ஜெட்டில் இந்த 5 அறிவிப்புகள் வெளியாகும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, நிலையான விலக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி வரம்பு அதிகரிக்கும்

பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறான நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், புதிய வரி முறையின் கீழ், வருமான வரி செலுத்துவோருக்கு, ஐந்து லட்சம் ரூபாயாக வருமான வரி விலக்கை அதிகரிக்கலாம். தற்போது ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்துக்கு 5% வரியும், ரூ.5 முதல் 7.5 லட்சம் வருமானத்துக்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.

நிலையான விலக்கு மாறும்

ஊதியம் பெறும் வகுப்பினர் ஒவ்வொரு ஆண்டும் நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனின் கின் கீழ் 50,000 ரூபாய் விலக்கு பெறலாம். வருமான வரியின் பிரிவு 16 (IA) இல் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

80C இல் விலக்கு கிடைக்கும்

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி செலுத்துவோர் ரூ. 1.5 லட்சம் தொகையை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என வரி செலுத்துவோர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பட்ஜெட்டில் இந்த விஷயத்தில் அரசு முடிவெடுத்தால், வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இந்த முதலீட்டை EPF, PPF, ELSS, NSC, NPS, Bank FD போன்றவற்றில் அவர்கள் செய்யலாம்.

ஓய்வூதியத்திற்கான முதலீடு 

வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அரசு இதிலும் வரி விலக்கு வரம்பை அதிகரிக்கக்கூடும். வருமான வரிச் சட்டத்தின் 80சிசிடி (1பி) பிரிவின் கீழ் அரசாங்கம் இந்த வரம்பை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவ காப்பீடு

தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்மின் கீழ் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி உள்ளது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் அதனை 50 ஆயிரம் ரூபாவாகவும், முதியோர்களுக்கு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறையின் எதிர்பார்ப்பு என்ன?

பல்வேறு தொழில்துறையினரும் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த பட்ஜெட்டில், வாடகை வருமானத்தின் மீதான வரி விலக்கு முதல் ஹோம் லோனில் பிரின்சிபல் அமவுண்ட் கழித்தல், ஆடம்பரப் பிரிவுக்கான ஊக்கத்தொகை, 80IBA பதிவு காலக்கெடுவை புதுப்பித்தல் போன்றவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றனர்.  

பட்ஜெட் 2023- எவற்றில் அதிக கவனம் கவனம் செலுத்தப்பட வேண்டும்?
* மேன்யுஃபேக்சரிங், இன்ஃப்ரா
* டிஃபென்ஸ்
* ரூரல் செக்டர்
* கன்சப்ஷன்
* கேபிடலைசேஷன்

உற்பத்தித் துறைக்கு ஊக்கம்
* PLI திட்டத்தின் நோக்கத்தை அதிகரிப்பதில் கவனம்
* பிஎல்ஐ திட்டத்தின் கீழ் துறைக்கு ஊக்கத்தொகை
* சாலை, ரயில், உள்கட்டமைப்புத் துறைக்கான செலவுகள் அதிகரிப்பு
* புதிய தொழில் தொடங்குவது தொடர்பான விதிமுறைகள் எளிதாக்குதல்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.