Netflix Password இனி யாருடனும் பகிரமுடியாது! இனி Web Series அவ்ளோதானா?

Netflix நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் Help Center பக்கத்தை புதிதாக மேம்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் வர முக்கிய காரணம் Netflix பயன்படுத்தும் பலர் அவர்கள் password விவரங்களை அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி ஒரு கணக்கை பலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் Netflix நிறுவனத்திற்கு பலமடங்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இப்போதும் உங்களால் Netflix கணக்கின் Password விவரங்களை பகிரமுடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் ஒரே இடத்தில் Location On செய்து Netflix ஆப் மூலம் மாதம் ஒருமுறையாவது அல்லது 31 நாட்களுக்கு ஒருமுறை Netflix மூலம் திரைப்படங்களை பார்க்கவேண்டும்.

நாம் வேறு யாருக்காவது நமது Netflix கணக்கின் விவரங்களை கொடுக்கவேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும். மேலும் வெளியில் நாம் செல்லும்போது நாம் Netflix பயன்படுத்த நமக்கு தற்காலிகமாக Log in செய்வதற்கு Code ஒன்று வழங்கப்படும். இது 7 நாட்களுக்கு வேலை செய்யும்.

இதனால் பயனர்களுக்கு Netflix பயன்படுத்துவதில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது என்று Netflix நிறுவனம் தலைமை கூறியுள்ளது. இது படிப்படியாக பயனர்களுக்கு அப்டேட் மூலமாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு என்று தனியாக ‘Kids Mystery Box’ ஒன்றை Android கருவிகளில் அறிமுகம் செய்துள்ளது. அதில் குழந்தைகள் வேறு எதற்கு செல்லாமல் நேரடியாக குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் மற்றும் குழந்தை திரைப்படங்கள் மட்டுமே இருக்கும்.

இந்த புதிய அப்டேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இனி பெற்றோர்கள் கவலை இல்லாமல் குழந்தைகளை அவர்களுக்கு விரும்பிய கார்ட்டூன் மற்றும் திரைப்படங்களை காண அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.