‘நான் அதிர்ஷடசாலி’ – இஸ்லாமியரால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டி பேச்சு.!

இஸ்லாம் மதம் குறித்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்த நாவலாசிரியரான சல்மான் ருஷ்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். தீவிர சிகிச்சை பிறகு உயிர் பிழைத்த சல்மான் ருஷ்டி இன்று கூறும்போது, ‘‘நான் அதிர்ஷ்டசாலி. நான் உண்மையில் சொல்ல விரும்புவது என்னவென்றால், எனது முக்கிய உணர்வு நன்றியுணர்வு.

என்னால் எழுந்து நடக்க முடிகிறது. நான் நலமாக இருக்கிறேன் என்று கூறும்போது, என் உடலில் தொடர்ந்து பரிசோதனைகள் தேவைப்படும் அவசியங்கள் உள்ளன. அது ஒரு மாபெரும் தாக்குதல். சரி, அந்த கேள்வியை நானே கேட்டுக்கொள்கிறேன், அதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை.

நான் நிறைய புத்தகங்கள் எழுதினேன். ‘The Satanic Verses’ எனது ஐந்தாவது வெளியிடப்பட்ட புத்தகம். ஆக, ஒரு எழுத்தாளனாக என் வாழ்வில் முக்கால் பங்கு ஃபத்வாவுக்குப் பிறகுதான் நடந்தது. ஒரு விதத்தில், உங்கள் வாழ்க்கையை நினைத்து வருந்த முடியாது’’ என்று அவர் கூறியுள்ளார்.

சல்மான் ருஷ்டி எதற்காக தாக்கப்பட்டார்.?

பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ 1981ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது. ஆனால் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதன் தலைப்பை சாத்தானின் வசனங்கள் என்று கூறலாம். இது அதற்கு முன்பு எந்தப் புத்தகமும் சந்திக்காத எதிப்பைச் சந்தித்தது. இஸ்லாமிய உலகம் கொந்தளித்தது.

ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவர் தலைமறைவாகவே வாழ நேரிட்டது. பிரிட்டிஷ் அரசு அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது. சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு இரானின் உச்சபட்ச மதத் தலைவராக இருந்த அயதுல்லா ருஹோல்லா கோமேனி, ஃபத்வா என்படும் மதக்கட்டளையை 1989ஆம் ஆண்டு பிறப்பித்தார்.

இந்தப் பிரச்னைக்காக இரானும் பிரிட்டனும் தங்களது அரசுமுறை ராஜ்ஜீய உறவுகளை முறித்துக் கொண்டன. இஸ்லாமியர்களின் தீவிரமான எதிர்வினையால் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கண்டித்தனர்.

செப்டம்பர் 1988ஆம் ஆண்டு அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சாத்தானிக் வெர்சஸ் நாவல் வெளியிடப்பட்டது. இந்த பின்-நவீனத்துவ நாவல் முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாவல் தங்களது மதத்தை அவமதிப்பதாக அவர்கள் கருதினர்.

இதற்குத் தடை விதித்த முதல் நாடு இந்தியா. அதன் பிறகு பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் இந்தியாவைப் பின்பற்றி ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்தன. ஆயினும் எழுத்துலகில் இந்த நாவல் பாரட்டப்பட்டது. நாவல்களுக்கு வழங்கப்படும் விட்பிரெட் பரிசைப் பெற்றது. ஆனால் நாவல் பிரபலமாகும் போதே அதற்கான எதிர்ப்பும் கடுமையாக அதிகரித்தது. ஏராளமானோர் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.

சில முஸ்லிம்கள் இந்த நாவல் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கருதினர். கதையில் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட பல அம்சங்களை முஸ்லிம்கள் கண்டித்தனர்.

சாத்தானின் வசனங்கள் என்ற தலைப்பு, குரானில் இருந்து முகமது நபியால் நீக்கப்பட்ட இரண்டு வசனங்களைக் குறிப்பிடுகிறது. அவ்விரு வசனங்களும் பிசாசினால் தரப்பட்டவை என்று முகமது நம்பியதாகக் கருதப்படுகிறது.

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனின் பிராட்ஃபோர்டில் முஸ்லிம்கள் புத்தகத்தின் நகலை எரித்தனர். செய்தித்தாள் முகவர்கள் அவரது புத்தகங்களைக் காட்சிப் படுத்துவதை நிறுத்தினர். ஆனால் தன் மீதான மத நிந்தனை குற்றச்சாட்டுகளை ருஷ்டி நிராகரித்தார்.

அதன் பிறகு ருஷ்டி தனது மனைவியுடன் போலீஸ் பாதுகாப்பில் தலைமறைவாக வாழத் தொடங்கினார். இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்திய துயரத்துக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஆனாலும் இரானின் உச்சபட்ச மதத் தலைவரான கோமேனி, ருஷ்டிக்கு எதிரான பத்வாவை மீண்டும் பிறப்பித்தார்.

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் வாங்கியது ஏன்? ரவீந்திரன் துரைசாமி பேட்டி!

இதனிடையே 1991ஆம் ஆண்டு ஜூலையில் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானில் மொழி பெயர்த்த ஹிடோஷி என்பவர் டோக்கியோவில் கொல்லப்பட்டார். உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

கண்ணில் விரலை விட்ட சீனா; சுட்டு தள்ளி உளவு பலூனை பஸ்பமாக்கிய அமெரிக்கா!

அதே மாதத் தொடக்கத்தில், இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோ, மிலனில் உள்ள அவரது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டார். எனினும் அவர் உயிர் பிழைத்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியும் கத்தியால் குத்தப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.