Smart TV Under 20K: 20 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் இந்தியாவின் சிறந்த 40inch ஸ்மார்ட் டிவி பட்டியல்!

டிவி என்பது இந்தியாவில் குடும்பங்களின் அத்யாவசிய எலக்ட்ரானிக் பொருட்களில் ஒன்றாக உள்ளது. மக்கள் அவர்களின் நாட்களை தொடங்குவதும் முடிப்பதும் இந்த டிவி மூலமாகவே ஆகும். சமீபத்தில் இதில் ஸ்மார்ட் டிவி மிகவும் பிரபலமாக மாறிவிட்டது.
மக்கள் ஸ்மார்ட்போன்களை போல ஸ்மார்ட் டிவி பயன்படுத்துகிறார்கள். இவற்றில் நாம் இணையம் மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் ஸ்மார்ட் டிவி பயன்பாட்டில் இப்போது மக்கள் அதிகம் வாங்குவது 40 இன்ச் டிவி ஆகும். இந்த செக்மென்ட்டில் 20 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் சிறந்த ஸ்மார்ட் டிவி எவை என்பதை பற்றி இந்த பட்டியலில் காணலாம்.

Xiaomi Mi TV 5A (40)இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் 19,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்த விலைக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவி இந்த Mi TV 5A ஆகும்.
இதில் முழு HD ஸ்மார்ட் LED ஸ்க்ரீன் உள்ளது. இந்த TV நமக்கு 1 வருட ஸ்டாண்டர்ட் வாரண்ட்டி வசதி மற்றும் தேவை ஏற்பட்டால் கூடுதல் வாரண்ட்டி செய்துகொள்ளலாம்.இதில் 24W ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர் வசதி உள்ளது. மேலும் 60HZ refresh rate, முழு HD (1920×1080 Pixels), HDR வசதி, Dolby Audio, 2 USB போர்ட் வசதி, 2 HDMI போர்ட், ப்ளூடூத் 5.0, Quad Core Processor, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் கண்ட்ரோல் வசதி போன்றவை உள்ளன.
Thomson 40 PATH 7777 (40) இந்த டிவி விலை 15,499 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் 40 இன்ச் முழு HD LED ஸ்க்ரீன் உள்ளது. இந்த டிவி 1 வருட வாரண்ட்டி உடன் வருகிறது. இதில் 1920×1080 Pixels, 16:9 ரேஷியோ மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இதிலும் 24W கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதில் 2 USB போர்ட் வசதி, 3 HDMI போர்ட், ப்ளூடூத் 5.0, HDR வசதி, Quad Core Processor, ஸ்மார்ட் கண்ட்ரோல் போன்ற பல வசதிகள் உள்ளன.
Infinix 40X1 (40) இதன் விலை 18,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் முழு HD ஸ்மார்ட் LED TV உள்ளது. இந்த டிவி 1 வருட வாரண்ட்டி வசதியுடன் கிடைக்கிறது. இதில் 1920×1080 Pixels ஸ்க்ரீன், 16:9 ரேஷியோ, 350 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
இந்த டிவியில் 60HZ Refresh rate, 24W கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர் வசதி, 2 USB போர்ட், 3 HDMI போர்ட், ப்ளூடூத் 5.0, Quad Core Processor, HDR வசதி, ஸ்மார்ட் மைக்ரோ டிம்மிங், ஸ்மார்ட் கண்ட்ரோல் வசதிகள் போன்றவை உள்ளன.
Acer P Series (40) இதன் விலை 16,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் முழு LED HD 60HZ Refresh rate கொண்ட ஸ்க்ரீன் வசதி உள்ளது. இந்த டிவி 1 வருட வாரண்ட்டி வசதி உள்ளது. இதில் 1920×1080 Pixels, 16:9 ரேஷியோ உள்ளது.
இதில் HDR (High Dynamic Range), Dolby Audio வசதி, 24W ஸ்பீக்கர் வசதி, 2 USB போர்ட், 2 HDMI போர்ட், ப்ளூடூத் 5.0, Android OS, ஸ்மார்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
TCL 40S5205 (40) இதன் விலை 18,889 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் முழு HD ஸ்மார்ட் LED ஸ்க்ரீன் உள்ளது. 1 வாரண்ட்டி வசதி, 16:9 ரேஷியோ, 1920×1080 Pixels, 60HZ refresh rate உள்ளது.
இதில் Dolby Audio வசதி, 20W கொண்ட 2 ஸ்பீக்கர் வசதி, 1 USB போர்ட், 2 HDMI போர்ட், ஸ்மார்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.