Google Chrome பயன்பாடு பிடிக்கவில்லையா! உங்களுக்கான மாற்று Browser பட்டியல் இதோ!

Google Chrome என்பது உலக மக்களின் இலவச Browser ஆகும். மக்கள் தினசரி பல வேலைகளுக்கு இதையே நம்பி உள்ளார்கள். இவை நமக்கு சிறந்த Browsing அனுபவம் தரும். என்னதான் உலகின் நம்பர் 1 Web Browser என்ற பெயர் Google Chrome எடுத்தாலும் இதற்கு போட்டியாளர்கள் இல்லாமல் இல்லை. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட Browser இதன் போட்டியாளராக உள்ளது. அதில் சில முக்கியமான போட்டியாளர்களை இந்த பதிவில் காணலாம்.

Mozilla Firefox

இணையதள பயன்பாட்டின் ஆரம்பகாலத்தில் இருந்து பயன்படுத்துபவர்கள் இதை மறக்கமாட்டார்கள். இதை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்களை விட கம்ப்யூட்டர் போன்ற கருவிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த செயலி 50க்கும் மேற்பட்ட மொழிகளில் Windows, Mac, Linux, Android மற்றும் iOS என அனைத்திலும் கிடைக்கிறது.

Brave

நீங்கள் உங்களின் தனியுரிமை பாதுகாக்கவேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கான சிறந்த பிரௌசர் இந்த Brave ஆகும். Google Chrome போன்று நீங்கள் தேடுவதை வைத்து உங்களுக்கு விளம்பரம் எல்லாம் இது காட்டாது. நீங்கள் தேடுவது எதுவானாலும் அது மறைவாகவே இருக்கும். இதில் Ad Blocker உள்ளது.

Opera

இணைய சேவை உள்ள பீச்சர்போன்கள் பயன்படுத்திய பயனர்களுக்கு நிச்சயம் Opera Browser பற்றி தெரியும். இது மிகவும் சாதாரண டிசைன் மாற்று எளிய பயன்பாடு உள்ள பிரௌசர் ஆகும். இது உங்களின் போனில் பயன்படுத்த சிறிய அளவு ஸ்டோரேஜ் இருந்தால் போதுமானது.

Microsoft Edge

யாராலும் Microsoft Internet Explorer மறக்கமுடியாது. ஆனால் Google Chrome வந்ததாலும் இதன் Loading வேகம் மிகவும் குறைவு என்பதாலும் பலர் இதை விட்டு Google Chrome பயன்படுத்தினார்கள். ஆனால் இழந்த நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்க Microsoft அறிமுகம் செய்துள்ள பிரௌசர் இந்த Edge ஆகும். இது Google போலவே அனைத்து பிரீமியம் அனுபவத்தை தரும் ஒரு செயலியாக இருக்கிறது.

Apple Safari

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பிரௌசர் ios பயனர்கள் மட்டும் பயன்படுத்தலாம். Android பயனர்கள் இந்த சஃபாரி பயன்படுத்தமுடியாது. முழுக்க முழுக்க ஆப்பிள் கருவிகளை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த Safari சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் இதில் ஒரு கருவியில் ஒருந்து இன்னொரு கருவிக்கு தானாகவே Sync ஆகும் வசதியும் இருப்பதால் மிகவும் எளிதாக பயன்படுத்தலாம். மேற்கண்ட அனைத்து பிரௌசர் மூலமாக நாம் Google Search பயன்படுத்தலாம். இவை அனைத்திலும் உங்களின் Privacy பாதுகாக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.