அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள் – முக்கிய தலைவர் பேச்சால் பரபரப்பு!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை திடீரென அறிவித்து இருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.  ஒரு தேர்தல் என்றால் வாக்காளர் பட்டியல், வேட்பாளருக்கு கால அவகாசம் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  திடீர் சாம்பர், ரசம் போன்று இந்த தேர்தலை அறிவித்துள்ளார்.  தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட விதிகளை மாற்றி தேர்தலை அறிவித்துள்ளது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தியுள்ளது.  அதிமுக ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.  இந்த தேர்தலை ஏற்கவில்லை என்றாலும் எங்களை பொறுத்தவரை வேதனையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நடத்தும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, சட்டரீதியாக சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எண்ணத்திற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பாடம் கற்க வில்லை.  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி செல்கிறது.  இவர்கள் திருந்துவார்கள் என்றோ, மீண்டும் இணைவார்கள் என்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  ஈரோடு இடைத்தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்த அனுமதி தந்தோம். இரட்டை இலை சின்னத்தை தந்தோம். ஆனால் இடைத்தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்து இருக்கிறது.  பிரேக் இல்லாத வண்டியை போல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செல்கிறார்கள். சட்ட, நீதி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். 

இனிமேல், எடப்பாடி பழனிச்சாமி தரப்பை நாங்கள் பொறுப்படுத்த போவதில்லை, கவலைப்பட போவதில்லை. அதிமுக என்ற விளை நிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தொண்டர்களை சந்திப்போம். அதிமுக சிறுபான்மை கூட்டத்தில் சிக்கி தவிக்கிறது.  அதிமுக தொண்டர்கள் இந்த தேர்தலை புறக்கணியுங்கள்.  தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கிறது.  நாங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம், நீதிமன்றத்தை நாடுவோம்.  எடப்பாடி தரப்பினர் விளையாட்டு பிள்ளைகள். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு அதிமுகவின் சட்ட விதிகள், கட்சிக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்கள் பற்றி  தெரியாது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது ஏற்புடையது இல்லை. எனவே,  எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் நடந்த தகுதியில்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தலைமை ஏற்றபிறகு தொண்டர்கள் அதிகமாக வில்லை,  குண்டர்கள் அதிகமாகி விட்டார்கள்.  சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக செயல்படுகிறார்கள். சசிகலா பொதுச் செயலாளர் குறித்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. டி டி வி தினகரன் தனி கட்சி தொடங்கியுள்ளார். அவர், கம்யூனிஸ்ட் கட்சிகள் போல இணைந்து செயல்பட தயாராக உள்ளார் நாங்களும் எப்போதும் வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.