சென்னையை குறி வைத்த வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு மழை..! சுடசுட தகவல்..!

சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில்
மழை
பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பேரையும் என சென்னை வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இன்று தற்போது ”அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர், அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர், நெல்லை, விருதுநகர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென” என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 23 ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

24.03.2023 முதல் 26.03.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்

27 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.