பெண்கள் பிரீமியர் லீக் சாம்பியன் யார்?: டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது. முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

வீராங்கனைகள் விவரம்:

டெல்லி:

மெக் லேனிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிஹா ரொட்ரிங்ஸ், மரிஷினி கெப், அலிஸ் கெப்சி, ஜூஸ் ஜெசன், அருந்ததி, தனியா படியா, மினு மனி, ராதா, ஷிகா பாண்டே

மும்பை:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யஸ்டிகா பாட்யா, ஹைய்லி மேதிவ்யூஸ், நட் ஷிவர்-பர்ண்ட், மிலெய் கீர், பூஜா வாஸ்டகர், இசி வாங், அமொஜத் கவுர், ஹுமாரியா காசி, ஜிந்திமனி கலிடா, சிகா இஷாகியூ.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.