“ராகுல் காந்தி வழக்கை நாங்களும் கவனித்து வருகிறோம்” – அமெரிக்கா சொல்வதென்ன?!

கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது மோடி எனும் சமூகம் குறித்து அவதூறு செய்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர் தங்கியிருந்த அரசு இல்லத்தையும் அரசிடம் ஒப்படைக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ( US Department of State Principal Deputy Spokesperson ) வேதாந்த் படேல், “சட்டத்தின் ஆட்சியும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதும் ஜனநாயகத்தின் மூலக்கல்லாகும். மேலும் இந்திய நீதிமன்றங்களில் ராகுல் காந்தியின் வழக்கை நாங்களும் கவனித்து வருகிறோம். ஆனால், இப்போதைக்கு வழக்கு குறித்து நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. இந்தியாவும், அமெரிக்காவும் சில ஜனநாயக மாண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

ராகுல்காந்தி – நரேந்திர மோடி

அதை நிலைநிறுத்த அமெரிக்க அதிகாரிகள் எப்போதுமே இந்திய அரசுடன் தொடர்பில் இருக்கின்றனர். இதுதான் அமெரிக்கா – இந்தியா உறவின் அடித்தளம். நாங்கள் ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், இரு ஜனநாயக நாடுகளை வலுப்படுத்துவதற்கான திறவுகோலாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.