சுழற்பந்து வீச்சில் பிரபாத் ஜயசூர்ய உலக சாதனை..

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஆகக்குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இன்று (28) பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்கை (Paul Stirling) தோற்கடித்து தனது 50வது டெஸ்ட் விக்கெட்டை பிரபாத் கைப்பற்றினார். இதன்படி பிரபாத் ஜயசூரிய 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர், 8 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் Alfred Louis Valentine இந்த உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்த சாதனைக்கு மேலதிகமாக பிரபாத் ஜயசூர்ய குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ரமேஷ் மெண்டிஸ் 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.