கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு.!

கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவியேற்கவுள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று (18.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 20.5.2023 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பார் என்றும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் காங்கிரஸ் கட்சி நேற்று வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.