வெளியானது சூர்யாவின் கங்குவா பட புரோமோ வீடியோ

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் 'கங்குவா'. ஹிந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சரித்திர காலத்து கதையில் இந்த படம் பிரமாண்டமாய் தயாராகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் புரோமோ டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'கங்குவா'வின் உலகம் வீரம் மிக்கதாகவும் பார்வையாளர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தையும் தர உள்ளது. மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மையமாக இருக்கும்.
பிரமிக்க வைக்கும் காட்சிகள், காவியத்துவமான இசை, எல்லாவற்றையும் விட சூர்யாவின் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு கொண்ட 2 நிமிட புரோமோ டீஸர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பான்-இந்தியத் திரைப்படமான 'கங்குவா'வின் உருவாக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, பார்வையாளர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டியிலும் உருவாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
முன்னதாக கங்குவா படத்தின் ப்ரோமோ வீடியோ பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் சிவா: கங்கு என்றால் நெருப்பு. இதை தான் தலைப்பாக வைத்துள்ளோம். 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. கற்பனையாக வடிவமைக்கபட்டுள்து. இந்தக் கதை நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. சரித்திர காலத்து பகுதி 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நிறைய போர்க்களக் காட்சிகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். குறிப்பாக மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு மேற்கொண்டது மிகவும் சிரமமாக இருந்தது. 3டியில் பத்து மொழிகளில் படம் வெளியாகிறது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.