மோடியுடன் ஒரே மேடையில் சிரித்து பேசிய சரத் பவார்.. இப்போ தானே கூட்டணி ரெடியாச்சு.. அதுக்குள்ளயா?

புணே:
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் நிலையில், அக்கூட்டணியின் முக்கிய தலைவரான சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன.

இதன் ஒருபகுதியாக, தங்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உட்பட 26 எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியை அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரே முக்கியமானவராக கருதப்படுகிறது. இதுபோன்ற சூழலில்தான், மகாராஷ்டிரா மாநிலம் புணேவில் லோக்மான்ய திலக் சமாரக் மந்திர் அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சரத் பவார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என்றே எதிர்க்கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் நினைத்தனர். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுப்பொடியாக்கி விட்டு இந்த நிகழ்ச்சியில் சரத் பவார் கலந்துகொண்டார். அப்போது மோடி மேடைக்கு வந்ததும் நேராக சரத் பவாரிடம் சென்றுதான் நலம் விசாரித்தார். இருவரும் சிரித்து பேசிக் கொண்டனர். இதுதான் தற்போது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், அதே மேடையில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரும் இருந்தார்.

கேரளா எல்லாம் ஜுஜுபி.. சீனாவை சின்னாபின்னமாக்கிய “பேய்” மழை.. வெள்ளத்துக்கு 20 பேர் பலி.. பலர் மாயம்

தேசியவாத காங்கிரஸ் தற்போது சரத் பவார் அணி, அஜித் பவார் அணி என இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்ததும், மோடியிடம் நட்பாக பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மோடியுடன் ஒரே மேடையை சரத் பவார் பகிர்ந்து கொண்டதற்கு சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.