துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரகுமான்!

ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. கபடி வீரர் கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் அந்த படத்தில் நடிப்பதற்காக கபடி விளையாட்டு பயிற்சிகளை பெற்று வந்தார் துருவ் விக்ரம். ஆனால் மாரி செல்வராஜ், அப்பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வடிவேலு, உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியவர், தற்போது அப்படம் திரைக்கு வந்துவிட்டதால், மீண்டும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார். மேலும், இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் நான்காவது படத்தை டாடா என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.