தேசிய விருதுக்கு பிறகு நடிகர் மாதவன் காட்டில் மழைதான் போல !! கிடைத்திருக்கும் புதிய மற்றும் பெரிய பதவி !!

சாக்லேட் பாய் மாதவன்தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் மாதவன். இவர் 90ஸ் பெண்களின் சாக்லேட் பாய் என்றே சொல்லவேண்டும். அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய பெண் ரசிகை பட்டாளத்தை உருவாக்கினார். அலைபாயுதே படத்தை தொடர்ந்து, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், என்னவளே என பல படங்களில் நடித்திருக்கிறார் மாதவன். திடீரென குறைந்த மாதவனின் மார்க்கெட் இயக்குனர் சுதா கொங்குராவின் இறுதிச்சுற்று படத்தின்மூலம் மீண்டும் உயர்ந்தது. விக்ரம் வேதா, மாறா, ராக்கெட்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ராக்கெட்ரிநடிகராக வளம் வைத்துக்கொண்டிருந்த மாதவன், கடந்த 2021இல் ஒரு படத்தை இயக்கினார். இந்த படத்தை இயக்கி நடித்து அவரே தயாரித்தார். இந்த படம், தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியானது. நம்பி நாராயணன் என்னும் இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையை படமாக்கி இருந்தார் மாதவன். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார்.
தேசிய விருதுசமீபத்தில், தேசிய சினிமா விருதுகளுக்கான அறிவிப்பு வெளியானது. தமிழில் சிறந்த படமாக வரலாம், என பல படங்கள் கணிக்கப்பட்டன. அதன்படி, சிறந்த ஃபீச்சர் படத்துக்கான தேசிய விருதை மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் வென்றது. திரையுலகினர் பலரும் இந்த வெற்றியை கொண்டாடினர்.

புதிய மற்றும் பெரிய பதவிஇந்நிலையில், நடிகர் மாதவனுக்கு மத்திய அரசாங்கம் சார்பில் மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புனேவில் உள்ள இந்தியாவின் திரைப்பட கல்லூரியின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த பதவியில் சேகர் கபூர் என்பவர் இருந்தார். இந்நிலையில், இந்த பதவிக்கு மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா புனே நகரில் இருக்கிறது. இது திரைப்பட கல்லூரி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கல்லூரி மத்திய அரசால் 1960இல் உருவாக்கப்பட்டது. இந்த கல்லூரியில்
திரைப்படம், தொலைக்காட்சி, அனிமேஷன் சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
அனுராக் சிங் தாகூர் ட்வீட்இந்த பதவியை மாதவனுக்கு அளித்த பின்னர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் ட்வீட்டரில், “வாழ்த்துக்கள் மாதவன், திரைப்பட கல்லூரியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள், உங்களின் பரந்த அனுபவமும், பலமான நெறிமுறைகளையும் கொண்டு இந்த கல்லூரியில் நல்ல மாற்றங்களை கொண்டுவருவீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.