ஓ.எம்.ஆர் சாலையில் வருகிறது லேட்டஸ்ட் டெக்னாலஜி… ரூ.95 கோடியில் இரண்டு மெகா அப்டேட்!

மாநில நெடுஞ்சாலை எண் 49ஏ. இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. அதுவே ஓல்டு மகாபலிபுரம் சாலை (Old Mahabalipuram Road – OMR) என்று சொல்லி பாருங்கள். சென்னையும், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியும் சட்டென நினைவுக்கு வரும். மாமல்லபுரம், புதுச்சேரி செல்ல சூப்பர் ரூட் என உற்சாகம் பெருக்கெடுக்கும். இந்த சாலைக்கு ”ராஜிவ் காந்தி சாலை” என்ற அதிகாரப்பூர்வ பெயரும் உண்டு. ஆனால் ஓ.எம்.ஆர் என்று அழைத்தே பழக்கப்படுத்தி கொண்டோம்.

​ஓ.எம்.ஆர் சாலைசென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி மாமல்லபுரம் அருகே முடிவடைகிறது ஓல்டு மகாபலிபுரம் சாலை. இந்த வழித்தடத்தில் தான் கலைஞர் கருணாநிதியின் கனவு திட்டமான டைடல் பார்க் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது. ஏராளமான ஐடி நிறுவனங்கள் உடன் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறது. இதேபோல் ஓ.எம்.ஆர் சாலை நெடுகிலும் ஏராளமான ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தேசிய ஆராய்ச்சி ஆய்வகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்டவை இருக்கின்றன.குவிந்த ​ஐடி நிறுவனங்கள்குறிப்பாக சிறுசேரி சிப்காட் வர்த்தக ரீதியிலும், வேலைவாய்ப்பு ரீதியிலும் மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. ஓ.எம்.ஆர் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். முன்பு சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தன. இந்த சூழலில் செங்கல்பட்டு வழியாக திருச்சி, சேலம், மதுரை செல்ல திருப்போரூர் ரூட்டை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி சாலையில் நெரிசல்குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருப்போரூர் ரூட்டை பயன்படுத்த போக்குவரத்து காவலர்களே அறிவுறுத்துகின்றனர். சுற்றுலா செல்பவர்களுக்கும் இதே ரூட் தான். மேலும் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியாக தான் செல்லும். எனவே சாலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர மழைக் காலங்களிலும் வெள்ளத்தால் ஓ.எம்.ஆர் சாலை பாதிக்கப்படுகிறது.
​தமிழக அரசு முடிவுபோதிய மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் படி (CRIDP) புதிதாக ஒரு விஷயத்தை கையிலெடுத்துள்ளனர்.
​தேங்காய் நார் தொழில்நுட்பம்அதாவது, சாலையின் இருபுறங்களிலும் தேங்காய் நார் தொழில்நுட்பத்தை (Coir Mat Technology) பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். தேங்காய் நார்களை கொண்டு புல்தரை போன்ற சாலை கட்டமைப்பை இருபுறமும் ஏற்படுத்தி விட்டால் இரண்டு விஷயங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஒன்று, மண் அரிப்பு ஏற்படாது. சாலையின் இருபுறமும் உள்ள சாய்வான பகுதி பாதுகாக்கப்படும்.
இன்னும் 3 மாதங்களில்இரண்டு, வெள்ள பாதிப்புகளால் ஓ.எம்.ஆர் சாலை பாதிக்கப்படாது. இதற்காக தான் தேங்காய் நார் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வரையிலான 10 கிலோமீட்டர் தூரத்திற்கு 95 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் சாலையின் சரிவில் 100 மில்லிமீட்டர் அளவிற்கு மண் சேர்த்து தடிமன் ஆக்கப்படும். அதன்மீது தேங்காய் நார் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.