ஆசிய கோப்பை 2023-ல் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய 6 சர்ச்சைகள்

ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. ஆசிய கோப்பையின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இப்போது சூப்பர்-4 சுற்றில், 4 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத இருக்கின்றன. இதற்குள்ளாகவே ஆசிய கோப்பை தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இருந்து எழும் சர்ச்சைக்களுக்கு ஒரு என்டு கார்டே இல்லை என்ற அளவுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்னென்ன சர்ச்சைகள் என்று இங்கே பார்க்கலாம். 

பாகிஸ்தானில் இருந்து மாற்றம்

ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால் பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால் ஆசிய கோப்பை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தபோது, இலங்கையில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. இருந்தாலும் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டுமே இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்ற புள்ளியில் பாகிஸ்தான் நிற்க, மீண்டும் சர்ச்சை எழுந்தது. இலங்கையில் இப்போது போட்டி நடைபெறுகிறது

UAE-ல் நடத்த கோரிக்கை

பாகிஸ்தானில் போட்டி நடத்தவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் இதனை இந்திய கிரிக்கெட் வாரியம், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கவில்லை. கடந்த ஆண்டு அங்கு நடத்தப்பட்ட நிலையில் வெப்பத்தை காரணம் காட்டி மற்ற அணிகள் அங்கு செல்ல மறுத்துவிட்டன. 

உண்மையில், பிசிசிஐ மற்றும் பிசிபி இடையேயான சர்ச்சைக்குப் பிறகு, அப்போதைய பிசிபி தலைவர் நஜாம் சேத்தி, ஆசிய கோப்பையை விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த வேண்டும், இலங்கையில் அல்ல என்று நம்பினார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பை நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகவும் சூடாக இருக்கிறது, எனவே இலங்கை ஒரு சிறந்த தேர்வாகும் என்பது பிசிசிஐயின் வாதம்.

இரு நாடுகளில் ஆசிய கோப்பை

ஒருவழியாக இலங்கை தேர்வு செய்யப்பட்டது, ஆசிய கோப்பை வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இருநாடுகளில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியே, இலங்கையில் அதிக போட்டிகள் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. 

காலியாக இருந்த மைதானம்

பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு சர்ச்சையாகி உள்ளது. கடைசியாக முல்தானி நடைபெற்ற போட்டியில் மைதானம் காலியாக இருந்தது. 

இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் 

இலங்கையில் நடத்த வேண்டாம் என கூறியதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்காததால் மழையால் ரத்து செய்யப்படும் போட்டிகளுக்கும், ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் போட்டிகளுக்கும் ஏற்படும் வருவாயை அசிய கிரிக்கெட் கவுன்சில் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்தியிருந்தால் இந்த பிரச்சனைகள் வந்திருக்காது என்றும் பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கேற்ப இலங்கையில் நடைபெறும் பல போட்டிகள் மழையால் கைவிடப்படுவது வாடிக்கையாகியுள்ளது.

மைதானங்களை மாற்ற கோரிக்கை

கொழும்பில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அங்கிருந்து போட்டிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இறுதிப்போட்டி உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் திட்டமிட்ட மைதானங்களிலேயே நடைபெறும் அறிவிக்கப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.