இந்தியா பெயர் மாறியதா? ஜி 20 மாநாடு தொடக்கம்… பிரதமர் மோடி முன்பு 'பாரத்' பலகை!

ஜி 20 மாநாடு

ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கிய பிறகு இந்த முதல் மாநாடு நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இந்த ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இத்தாலி, வங்கதேசம், மொரிஷியஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

பாதுகாப்பு

இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜி20 உச்சி மாநாடு காரணமாக டெல்லியில் பல்வேறு பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டியாக மாறும் திருப்பதி… இவ்வளவு நன்மைகளா… வேற லெவல்!

இரங்கல்

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 மாநாடு பாரத் மண்டபத்தில் தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கட்டனா இந்த நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

ஆப்பிரிக்க யூனியன்

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தங்கள் நாட்டின் கொள்கை என்றார். மேலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆப்பிரிக்க யூனியனை அழைத்தார் பிரதமர் மோடி. இதையடுத்து ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அஸாலி அசோமானியை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்று அழைத்து வந்தார்.

பிரதமர் மோடியை அணைத்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்… ஜி 20 மாநாடு க்ளிக்ஸ்!

இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்

அப்போது பிரதமர் மோடியும் ஆப்பிரிக்க யூனியன் தலைவரை ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் ஏற்கனவே ஆப்பிரிக்க யூனியனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அஸாலி அசோமானி அமர்ந்தார். இதன்மூலம் ஜி 20 அமைப்பில் 21 வது நாடாகவும் நிரந்தர உறுப்பினராகவும் ஆப்பிரிக்க யூனியன் இணைந்தது. இதன்மூலம் ஜி 20 நாடுகளின் உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை நிரந்தரமாக இணைக்கும் நடவடிக்கை நிறைவடைந்தது.

பாரத்

இதனிடையே ஜி 20 மாநாடு நடைபெறும் அரங்கில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்ப்டடுள்ளது. அப்போது பிரதமர் மோடியின் முன்பும் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. பெயர் பலகை மாற்றப்பட்டிருப்பது விவாதங்களை எழுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.