பிடிஆர் கிட்ட இந்த விஷயத்துல மோத முடியுமா? புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வச்ச சம்பவம்!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்மொழிந்து அதனை ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் அமித் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

ஓரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்புஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு காங்கிரஸ், திமுக என இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயக நாடான இந்தியாவில் அதிபர் ஆட்சியை அமைப்பதற்கான முயற்சி இது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளோ இதனால் செலவுகள் குறையும், அதிகாரிகளின் பணிச்சுமை குறையும் என்ற வாதத்தை முன்வைக்கின்றன.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதுதமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சொல்லும் செலவு உள்ளிட்ட காரணங்களை மறுத்து புள்ளிவிவரங்களுடன் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பான் மாநிலங்களின் ஒன்றியம் என்ற கூட்டாட்சி முறையை தெளிவாக மீறுவது போல ஆகும்.
​ஒரே தேர்தலால் செலவு மிச்சமாகுமா?ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் செலவுகள் மிச்சமாகும் என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்க வேண்டியது. ஏனெனில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் புள்ளிவிவரங்கள் படி, ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு 1 கோடி ரூபாய் மட்டுமே செலவாகிறது. அத்துடன், ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த 4,150 கோடி ரூபாய் செலவாகிறது. ஒட்டுமொத்தமாக 5,500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய தொகை என்றாலும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது இது மிக மிக சிறிய தொகையாகவே உள்ளது என்று கூறியுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
தேர்தலுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதுஉதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். 234 சட்டமன்றத் தொகுதிகளை தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 250 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த பட்ஜெட்டும் பட்ஜெட் 13 லட்சம் கோடியாக இருக்கும் என நான் மதிப்பிட்டுள்ளேன் என்று கூறிய அவர், இதனை மதிப்பில் வைத்துப் பார்த்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலால் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இருந்து 0.02 சதவிகிதம் மட்டுமே செலவிடப்படுகிறது. இதன்மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அமைப்பு முறையால் செலவு மிச்சமாகிறது என்ற வாதங்கள் அனைத்து தவிடுபொடியாகிறது என்றார்.
​வீணாகும் அரசுகளின் பணம்செலவு மிச்சமாகும் என்ற விஷயத்துக்குள் நாம் செல்லும் அதே சமயம் நாடு முழுவதும் சிலைகள் வைப்பதற்காகவும், அரசின் விளம்பரங்களுக்காகவும் மத்திய, மாநில அரசுகளால் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்படுவதையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். ஆகவே செலவு குறையும், அதிகாரிகளுக்கு நேரம் மிச்சமாகும் என்பதான காரணங்களைக் கொண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தை நாம் நியாயப்படுத்த முடியாது.

அரசியல் கட்சிகளின் மீது அரசுக்கு ஏன் அக்கறை?ஒரே நாடு ஒரே தேர்தலால் அரசியல் கட்சிகளுக்கான செலவு பெருமளவு குறையும் என்பது உண்மைதான். அரசியல் கட்சிகளின் செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக ஏன் நமது அரசியலமைப்புச் சட்டத்தை துண்டாக்க வேண்டும். தேர்தலில் வேட்பாளராக இருந்த வகையிலும், ஒரு கட்சியில் அணியின் தலைவராக இருந்த வகையிலும் எனக்கு கிடைத்த அனுபவங்களின் படி தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய குறைவான தொகை செலவிடுவதற்கு பதிலாக அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.