விசா இல்லா பயணம்… ஐக்கிய அரபு அமீரகம் அரசு போட்ட ஒப்பந்தம்: பயணிகள் ஹேப்பி!

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோல்டன் விசா முறையில் சில மாற்றங்களை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம் ஏராளமான சலுகைகளையும் அளித்தது.

ஆர்மேனியா

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து அவர்களின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயண முறை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை ஆர்மேனியாவின் துணை வெளியுறவு அமைச்சர் வாகன் கோஸ்டன்யன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஐரோப்பா, மத்திய கிழக்கை இந்தியாவுடன் இணைக்க மாஸ் பிளான்.. ரெடியாகும் ரயில்வே – கப்பல் போக்குவரத்து!

ஒப்பந்தம் கையெழுத்து

அதில் ஆர்மேனியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான அரரத் மிர்சோயன் (Ararat Mirzoyan) அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றபோது ஆர்மீனியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கான விசா முறையை நீக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கோஸ்டன்யன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் வர்த்தகம்
அரசு முறை பயணம்

இந்த வார தொடக்கத்தில், ஆர்மேனியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரரத் மிர்சோயன், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார். அப்போது பொருளாதாரம், முதலீடு, வளர்ச்சி, சுற்றுலா மற்றும் கல்வித் துறைகள் குறித்து ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதித்தனர்.

விஜயலட்சுமி பாலியல் புகார்… சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை… எனன்ன காரணம்?

3 மணிநேர பயணம்

ஆர்மேனியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் அமைந்துள்ள ஆர்மேனிய நாட்டிற்கு பயணம் செய்யும்போது ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் தகவல்

இருப்பினும், ஆர்மேனிய வெளிவிவகார அமைச்சகத்தின் இணையத்தளம் இன்று, ஆர்மேனிய குடிமக்கள் எமிரேட்ஸில் நுழைவதற்கு விசா தேவை என்று காட்டி வருகிறது. துபாயின் அதிகாரப்பூர்வ சுற்றுலா வலைத்தளமான VisitDubai.com பக்கத்திலும் ஆர்மேனிய நாட்டவர்கள் துபாய்க்கு பயணம் செய்வதற்கு விசா தேவை என்று காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா பெயர் மாறியதா? ஜி 20 மாநாடு தொடக்கம்… பிரதமர் மோடி முன்பு ‘பாரத்’ பலகை!
விரிவுப்படுத்த திட்டம்?

ஐக்கிய அரபு அமீரகம், ஆர்மேனிய நாட்டு மக்களுக்கான விசா முறையில் மாற்றம் செய்துள்ளதை போல் மற்ற நாடுகளுடனான விசா முறையிலும் இதுபோன்ற மாற்றத்தை மற்ற அண்டை நாடுகளுக்கும் இனிவரும் நாட்களில் விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் உலக மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.