IND vs PAK: நீலக் கடலில் மூழ்கிய அகமதாபாத்! குவிந்த இந்திய ரசிகர்கள்… பாக் ரசிகர்களுக்கு பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க அகமதாபாத்தில் லட்சக்கணகான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அகமதாபாத் மைதானதே நீலக் கடலாக காட்சியளிக்கிறது. இந்த போட்டியை காண சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றிருக்கிறார்கள். போட்டி 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். ஏற்கனவே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டியில் சேஸிங் செய்த நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றதால், இந்திய அணியும் சேஸிங்கை தேர்வு செய்திருக்கிறது. 

October 14, 2023

டாஸ் போடும்போது, மைதானத்துக்கு வந்த கேப்டன் ரோகித் சர்மாவை ரசிகர்கள் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் வரவேற்றனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இப்போட்டியை பார்க்க ரசிகர்கள் காலை முதலே அங்கு குவியத் தொடங்கினர். அகமதாபாத் மைதானத்துக்கு வெளியே இந்திய ரசிகர்களின் கூட்டமே அலைமோதியது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்திய ரசிகர்களே பெரும்பாலும் குவிந்திருந்தனர். ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைய 10 மணிக்கு  தான் அனுமதி என்பதால், அகமதாபாத் மைதானத்துக்கு வெளியே ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என குதூகலமாக இருந்தனர். 

 October 14, 2023

இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியா ஜெய்ஹோ என விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். வந்தே மாதரம் என்ற முழக்கத்தையும் எழுப்பிய ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகியோரின் பெயர்களை வானை முட்டும் அளவுக்கு உச்சரித்தனர். இதனால் அகமதாபாத் மைதானத்துக்கு வெளியே உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ரசிகர்களின் ஆரவாரத்தில் களைகட்டியது. பிசிசிஐ சார்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக சிறப்பு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பாலிவுட் திரை பிரபலங்களான அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடல்பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். 

October 14, 2023

இந்த போட்டியை காணவந்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் குடிதண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மைதானம் முழுவதும் 100 உணவு கடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பர்ஸ், மொபைல் போன்கள், தொப்பி மற்றும் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இலவச தண்ணீர் மற்றும் முதலுதவி மருத்துவ சிகிச்சை எல்லாம் குஜராத் கிரிக்கெட் சங்கம் சார்பில் கொடுக்கப்பட இருக்கிறது. மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிகையாக பாகிஸ்தான் டீசர்ட்டுடன் இருக்கும் ரசிகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.