IND vs AFG: இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் போட்டியை எங்கு இலவசமாக பார்க்கலாம்? முழு விவரம்

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க இருக்கிறது. சுமார், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் 20 ஓவர் கிரிக்கெட்டில் களமிறங்குவதைக் காணலாம். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடு சிறந்தது இருந்தது. அதனால், இந்த தொடரிலும் அதேமாதிரியான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். மறுபுறம் ஆப்கானிஸ்தானும் இந்தத் தொடரில் தடம் பதிக்கும் முனைப்புடன் களம் இறங்கவுள்ளது. 

இந்த தொடரின் நேரடி ஒளிபரப்பை நெட்வொர்க் 18ல் பார்க்கலாம். 2024 டி20 உலகக் கோப்பைக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும். இந்த தொடரில் விளையாடுவதைப் பொறுத்து 20 ஓவர் உலக கோப்பையில் அவர்களை விளையாட வைப்பது குறித்து பிசிசிஐ பரிசீலிக்க உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

IND vs AFG இடையேயான முதல் T20 போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும்?

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

IND vs AFG முதல் T20 போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போடிக்கு அரை மணிந நேரத்துக்கு முன்னதாக டாஸ் போடப்படும்.

IND vs AFG முதல் T20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கு பார்க்கலாம்?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் T-20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் நெட்வொர்க் 18-ல் பார்க்கலாம்.

IND vs AFG முதல் T20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கு இலவசமாகப் பார்க்கலாம்?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம்.

IND vs AFG 1st T20 உத்தேச லெவன்:

இந்திய அணி உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்/சுப்மான் கில், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ்/ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.