Google Map: இனி கூகுள் மேப்பிலேயே காட்டுத் தீ, வானிலை தகவல்களை தெரிஞ்சுகலாம்!

கூகுள் Maps செயலியில் வீடு இருக்கும் இருப்பிடத்தின் வானிலை மற்றும் காற்றின் தர விவரங்களைச் சரிபார்ப்பதை Google இப்போது ஈஸியாக்கியுள்ளது. ஒருவர் இப்போது தங்களின் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் தேடும்போதே வானிலை ஐகானைக் கிளிக் செய்து முழுமையான வானிலை முன்னறிவிப்பைப் பெறலாம். இதன் மூலம் வானிலை பற்றிய விவரங்களையும், லைவ் காற்றின் தரக் குறியீடு பற்றிய தகவல்களையும் எளிதாகப் பெறலாம். 

கூகுள் மேப்ஸ் செயலியில் இப்போது மேல் வலது மூலையில் ஒரு சிறிய வானிலை ஐகான் இருக்கும். இது வானிலை விவரங்களுக்கு விரைவான அணுகலை வழங்குகிறது. மேலும் அதை விரிவாக்க மற்றும் வானிலை பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற இந்த ஐகானைக் கிளிக் செய்யலாம். தற்போது, இந்த அம்சம் Google Maps ஆப்ஸின் Android மற்றும் iOS பதிப்புகளில் கிடைக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கூகுள் மேப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் இருப்பிடம் மட்டுமல்லாமல், எந்த இடத்தை தேடினாலும் கூகுள் செயலியில் அந்த இடத்துக்கான வானிலை தகவலை தெரிந்து கொள்ளலாம். உங்கள் மொபைலில் Maps ஆப்ஸைத் திறக்கவும். அதில், நீங்கள் விரும்பும் இடத்தைத் தேடவும். மேல் இடது மூலையில் சிறிய வானிலை ஐகானைப் பார்த்து, அதனை கிளிக் செய்யவும். அதன்பிறகு வானிலையின் எதிர்கால முன்னறிவிப்புடன் மேலும் விவரங்களைப் பெறவும் என்ற ஐகானைக் கிளிக் செய்யவும். இந்த தகவல் weather.com-லிருந்து பெறப்பட்டு கொடுக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட தேதியில் நீங்கள் ஒரு இடத்திற்குப் பயணிக்கத் திட்டமிட்டால், இந்த அம்சம் அப்போது அங்கு இருக்கும் காற்றின் தரக் குறியீட்டுடன் அந்த இடத்தின் வானிலை பற்றிய யோசனையை உங்களுக்கு வழங்கும். இதேபோல், காட்டுத்தீ பற்றிய விவரங்களைப் பெற நீங்கள் Google வரைபடத்தைப் பயன்படுத்தலாம். மேலும் உங்கள் லைவ் லொகேஷனை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள கூகுள் மேப் செயலியை பயன்படுத்தலாம். கூடுதலாக, அப்டேட்டுகள், புகைப்படங்கள் மற்றும் ரிவ்யூக்களை பெற Maps செயலியில் உள்ளவர்களை நீங்கள் பின்தொடரலாம். Google Maps செயலிக்குள் யூசர்கள் செய்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அப்டேட் பிரிவில் கிடைக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.