லேப்டாப் அதிகம் ஹேங் ஆகிறதா? இத மட்டும் பண்ணுங்க போதும்!

Laptop Hang Problem: லேப்டாப் ஹேங் ஆவது ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன, இதனால் நீங்கள் பார்க்கும் வேலையிலும் சிரமம் ஏற்படலாம். சில நேரங்களில் லேப்டாப் ஹேங் ஆனால் நாம் பார்த்து கொண்டிருந்த வேலையை திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல் நேரிடும். தற்போது பலரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் லேப்டாப் ஹேங் ஆனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் லேப்டாப்பை சில எளிய உதவிக்குறிப்புகள் மூலம் பழைய வேகத்திற்கு கொண்டு வர முடியும்.

– தேவையில்லாத அப்ளிகேஷனை ஓபன் செய்து வைக்க வேண்டாம்.  ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் போது, ​​லேப்டாப்பின் ரேம் மற்றும் சிபியு அதிகம் வேலை செய்கிறது. இதனால் சில நேரங்களில் அதிக அழுத்தம் காரணமாக ஹேங் ஆகும் பிரச்சனை ஏற்படலாம்.  எனவே, லேப்டாப்பில் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை கிளோஸ் செய்யவும். 

– லேப்டாப்பில் உள்ள தேவையில்லாத ஸ்டார்ட்அப் புரோகிராம்களை ஆப் செய்யவும். பொதுவாக லேப்டாப் ஆன் ஆனவுடன் தானாகவே சில புரோகிராம்களும் பின்னால் ஆன் ஆகிவிடும்.  நாம் அதனை பயன்படுத்தாத போதிலும் அவை இயங்கி கொண்டு இருக்கும்.  எனவே, இவற்றை ஆப் செய்வதன் மூலம் தேவையில்லாத அப்ளிகேஷன் பின்னால் இயங்குவதை தடுக்கலாம். மேலும் லேப்டாப்பின் வேகமும் கூடும்.  

– ஹார்டிஸ்க்கில் அதிகமாக தரவுகள் இருந்தாலும் லேப்டாப் ஹேங் ஆக வாய்ப்புள்ளது.  உங்கள் லேப்டாப்பில் உள்ள ஹார்டிஸ்கில் அதிக போட்டோஸ் அல்லது வீடியோக்கள் இருந்தால் அதனை டெலிட் செய்வது நல்லது. இவை லேப்டாப்பின் வேகத்தை குறைக்கலாம். எனவே, தேவையற்ற போட்டோஸ், வீடியோஸ் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நீக்குவது நல்லது.

– லேப்டாப்களை வைரஸ் மற்றும் மால்வேரில் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியம்.  லேப்டாப் ஹேங் அல்லது ஸ்லோ ஆவதற்கு இவையும் ஒரு காரணமாக இருக்கலாம்.  எனவே, உங்கள் லேப்டாப்பில் ஆன்டி-வைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்து தொடர்ந்து ஸ்கேன் செய்யுங்கள்.  இதன் மூலம் உங்கள் லேப்டாப்பின் வேகத்தை அதிகப்படுத்த முடியும்.  அதே போல உங்கள் லேப்டாப்பில் இருக்கும் டிரைவர்ஸை அடிக்கடி அப்டேட் செய்யுங்கள்.  இதனை புதுப்பிக்கவில்லை என்றால் லேப்டாப் ஹேங் ஆக வாய்ப்புள்ளது. 
 
– விண்டோஸ் அப்டேட் மிகவும் முக்கியமானது.  பெரும்பாலும் லேப்டாப்பின் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த அடுத்தடுத்த அப்டேட்கள் உதவும். எனவே, உங்கள் விண்டோஸை எப்போதும் அப்டேட் நிலையில் வைத்திருப்பது நல்லது.  மேலும் உங்கள் லேப்டாப்பிற்கு ஒரிஜினல் அப்ளிகேஷனை நிறுவுவது நல்லது.

– லேப்டாப்பை அதிகம் ஹீட் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.  லேப்டாப் அதிகம் ஹீட் ஆனால், உள்ளே உள்ள பாகங்கள் பாதிப்படையலாம். எனவே, முடிந்தவை லேப்டாப்பை குளிர்ச்சியான இடங்களில் உள்ளது தூசி படாமல் பாதுகாக்கவும்.  அதே போல, உங்கள் லேப்டாப்பில் குறைந்த ரேம் மற்றும் HDD/SSD இருந்தால் அதனை அதிகபடுத்தவும். தற்போதுள்ள பல அப்ளிகேஷன்கள் அதிக ரேமை எடுத்து கொள்கின்றன. இதனால் மற்ற அப்ளிகேஷன்கள் இயக்க முடியாமல் போகிறது. இதனாலும் லேப்டாப் ஹேங் ஆக வாய்ப்புள்ளது.  

– மேலே குறிப்பிட்ட அனைத்து செயல்களை செய்தும் லேப்டாப் ஹேங் ஆனால் உடனே ரீசெட் செய்யவும். இது உங்கள் லேப்டாப்பில் மறைந்து இருக்கும் தேவையில்லாத தரவுகள், வைரஸ்கள், அப்ளிகேஷன்கள் போன்றவற்றை நீக்கும். இதன் மூலம் லேப்டாப் புதிது போல வேகமாக இருக்கும்.  ரீசெட் செய்தும் சரியாகவில்லை என்றால், உங்கள் லேப்டாப்பை பார்மட் செய்து பாருங்கள்.  இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் லேப்டாப்பின் ஹேங்கிங் பிரச்சனையை சரி செய்யலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.