Google Gemini: இரண்டு மாத கூகுள் ஜெமினி அட்வான்ஸ் சந்தாவை இலவசமாக பெறுவது எப்படி?

கூகுள் ஜெமினி அட்வான்ஸ்டு, கூகிளின் அல்ட்ரா 1.0 AI மாடலால் இயக்கப்படுகிறது. இந்த அப்டேட் அட்வான்ஸ் மாடலில், மிகவும் சிக்கலான பணிகளை கூட எளிதாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல நிரலாக்க மொழிகளில் உயர்தர குறியீட்டை உருவாக்க முடியும். இவற்றை பயன்படுத்த கூகுள் கட்டணம் நிர்ணயித்துள்ளது. சந்தா தொகையின் அடிப்படையில் இதன் பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், இரண்டு மாதங்களுக்கு ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் அடுக்கு சந்தாக்களுக்கு, இலவச ஜெமினி அட்வான்ஸ்டு அணுகலை Google வழங்குகிறது.

கூகுள் ஜெமினி அறிமுகம் செய்த கூகுள், அதனை இன்னும் மேம்படுத்த பல்வேறு வழிகளில் வேலை செய்து கொண்டே இருந்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான வேலைகளை நொடிப் பொழுதில் செய்து கொடுக்கும் வகையிலும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினும் இதனை பயன்படுத்தும் வகையிலும் கூகுள் ஜெமினி அல்ட்ரா மேம்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பார்டு என இருந்த கூகுள் சாட்போட் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு கூகுள் ஜெமினி என மாற்றப்பட்டுள்ளது. ஜெமினி அல்ட்ரா வெர்சன் இனி ஜெமினி அட்வான்ஸ்டு என்று அழைக்கப்படும். இவற்றை பயன்படுத்த தான் கட்டணம் செலுத்த வேண்டும். முன்னோட்டமாக இரண்டு மாதங்களுக்கு இலவச ஜெமினி அட்வான்ஸ்டு சந்தாவை இலவசமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கூகுள் ஜெமினிக்கு மூன்று துணை மாடல்கள் உள்ளன: ஜெமினி அல்ட்ரா, ஜெமினி ப்ரோ மற்றும் ஜெமினி நானோ. ஜெமினி நானோ மாடல் மிகவும் சிறியது மற்றும் ஸ்மார்ட்போன்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் சில அம்சங்களை வழங்குகிறது. அடுத்ததாக ஜெமினி ப்ரோ உள்ளது, இது கூகுள் ஜெமினியின் இலவச பதிப்பை இயக்குகிறது – கூகுள் பார்டின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பதிப்பு.

மூன்றாவது மற்றும் மிகவும் சக்திவாய்ந்த மாடல் கூகிள் அல்ட்ரா ஆகும். இதற்கு முன்பு பார்ட் அட்வான்ஸ்டு என்று பெயரிடப்பட்டது. இந்த மாடல் இந்த நேரத்தில் கூகிள் வழங்கும் மிகவும் சக்திவாய்ந்த மாடலாகும். இந்தியாவில், ஜெமினி அட்வான்ஸ்டை முயற்சி செய்ய விரும்புவோர் மாதம் ரூ.1,950 செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் Google One சந்தாதாரராக இருந்தால், எந்த கட்டணமும் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு ஜெமினி அட்வான்ஸ்டுக்கான சப்ஸ்கிரிப்சனைப் பெறலாம்.

Google One சந்தா

இந்தியாவில், Google One என்பது விரிவாக்கப்பட்ட கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும் சந்தா சேவையாகும். இது நான்கு லேயர் சந்தாவைக் கொண்டிருக்கிறது. 

1. அடிப்படை (100ஜிபி/மாதம் ரூ.130)
2. ஸ்டாண்டர்ட் (மாதம் 200ஜிபி/ ரூ 210)
3. பிரீமியம் (2TB/ மாதம் ரூ. 650)
4. பிரீமியம் (5TB/ மாதம் ரூ. 1,625)

இரண்டு மாதங்களுக்கு ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் சந்தாக்களுக்கு, சந்தா செலுத்தியவர்களுக்கு இலவச ஜெமினி அட்வான்ஸ்டு அணுகலை Google வழங்குகிறது. அதன்பிறகு, மாதம் ரூ.1,950 செலுத்த வேண்டும். நீங்கள் அடிப்படைத் திட்டத்தின் சந்தாதாரராக இருந்தால், (குறைந்தபட்சம்) நிலையான சந்தா திட்டத்திற்கு மேம்படுத்துவதற்கான விருப்பத்தை Google வழங்கும். பிப்ரவரி வரை மட்டுமே இந்த ஆப்சனும் இருக்கும். அதன்பிறகு எப்போது வேண்டுமானாலும் இந்த ஆப்சனும் நிறுத்தப்படும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.