கார் வாங்க நினைத்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… விலையை அதிரடியாக குறைத்த டாடா!

Tata EV Cars Price Reduced: பெட்ரோல், டீசல் விலை ஒரு புறம் இருக்க, இதுபோன்ற கார்கள் வெளியேற்றும் மாசுபாடு என்பது சூழலியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகமே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அறியப்படும் இந்தியாவிலும் இந்த நிலை தொடங்கி உள்ளது. 

எனவே, வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வானகங்களை சந்தைக்கு கொண்டு வர கடும் முயற்சி எடுத்து வருகின்றன. உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருப்பவரான எலான் மஸ்கின் Tesla நிறுவனமும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் உள்ள தேவையை புரிந்துகொள்ளலாம். 

டாடா நிறுவனம் அதன் Nexon மற்றும் Tiago ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் விலையை குறைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரையில் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாடா கார்களை வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் நல்ல செய்தி வந்துள்ளது எனலாம். 

அதிரடி விலை குறைப்பு

கார்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பேட்டர் செல்களின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனால் இந்த விலை குறைப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பே, டாடா நிறுவனத்தின் கார்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் அறிமுகமான டாடா Punch EV காரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. Nexon, Tiago EV கார்களில் மட்டுமே விலைக்கு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விலை குறைப்பு குறித்து டாடா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஒரு எலெக்ட்ரிக் காரின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரி செலவுகள் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. சமீப காலங்களில் பேட்டரி செல்களின் விலைகள் குறைந்துள்ளதால், இன்னும் அதன் விலை வீழ்ச்சியடையும் என்பதையும் கருத்தில் கொண்டு, இதனால் வரும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க நாங்கள் முடிவு செய்தோம்.

டாடா வெளியிட்ட அறிக்கை

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனத்தின் தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. எலெக்ட்ரி வாகனங்களை நாடு முழுவதும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை பரவலாக்குவதே எங்கள் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளது.

டாடா Tiago EV கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாத்தில் 8.49 லட்சம் ரூபாய் அறிமுக விலையில் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. டாடா Tiago EV காரில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. 24 kwh கெண்ட ஒரு பேட்டரி பேக்கில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கி.மீ., வரை முழுமயாக ஓடும். அதேபோல், 19.2 kWh கொண்ட மற்றொரு பேட்டரி பேக்கில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ., வரை ஓடும். 

இந்தியாவில் டாடாவின் இந்த விலை குறைப்புக்கு பின் Tiago EV கார் 7.99 லட்சம் ரூபாயில் தொடங்கும். Nexon EV 14.49 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது, நீண்ட தூர Nexon EV கார் 16.99 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. அதாவது Tiago கார் சுமார் ரூ.70 ஆயிரமும், Nexon EV சுமார் ரூ.1.20 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.