Valentine's Day: இன்று இதை செய்தால்… உங்கள் காதலர் அசந்து போவார்… டக்குனு பண்ணுங்க

Valentine’s Day 2024, Flowers Delivery: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் அனைவரும் தங்கள் ஜோடிக்கு பரஸ்பரம் பரிசுகள் அளிப்பது முதல் பல சர்ப்ரைஸ்களை வைத்திருப்பார்கள். அந்த வகையில், பண்டைய காலங்களில் காதலர்கள் தங்களின் தூதாக புறா போன்ற பறவைகளை பயன்படுத்துவார்கள். செய்தி அனுப்புவது, கவிதை அனுப்புவது, புறாக்களின் வாயில் மலர்களை வைத்து அனுப்புவது என பல விஷயங்களை செய்திருப்பதாக திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். 

அந்த வகையில், இந்த நவீன காலகட்டத்தில் தூதுவன் என்பது வேறு யாருமில்லை நமது ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள்தான். அத்தகைய ஆன்லைன் நிறுவனங்கள் காதலர் தினத்தில் காதலர்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவையை இன்று வழங்குகின்றன. ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம். 

பிக்பாஸ்கெட் (BigBasket) 

காதலர் தினத்தில் இணையர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் சாக்லேட்டுகள், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன் மலர் பூங்கொத்துகளையும் வழங்குவதற்கான ஆப்ஷனை பிக்பாஸ்கெட் வழங்குகிறது. இந்த சேவையில் ரோஜா உள்பட பூக்களை வழங்குகிறது. மேலும் இந்த சேவை பெற குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கான ஆர்டரையாவது செய்ய வேண்டும்.

இந்தச் சேவை BigBasket Now மூலம் செய்யப்படும் ஆர்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஆர்டர் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள்ளும், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்குள்ளும் டெலிவரி செய்யப்பட்டுவிடும். 

அமேசான் (Amazon)

அமேசான் நிறுவனத்தின் பிராந்திய அமைப்பு, நாடு முழுவதும் புதிய பூங்கொத்து வழங்கும் சேவையை தொடங்கி உள்ளது. இந்த சேவை காதலர் தினத்திற்கு சற்று முன்னதாக ஆரம்பமாகி உள்ளது. இது இந்தியாவின் 46 நகரங்களில் 3,000 க்கும் மேற்பட்ட PIN CODE-களுக்கு கிடைக்கிறது குறப்பிடத்தக்கது. 

30 வகையான பூக்களைக் கொண்ட 1200 பூங்கொத்துகள் முதல் ஜோடிகளுக்கு பல ஆப்ஷன்களை அமேசான் வழங்குகின்றது. 3,000 ரூபாய்க்கு மேல் உள்ள வாங்கும் குறிப்பிட்ட கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடி மற்றும் கட்டணமில்லா தவணை உடன் ஒரே நாளில் டெலிவரி செய்யும் ஆப்ஷனும் உள்ளது.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியையும் வழங்கப்படுகிறது. அமேசானில் இந்த பூங்கொத்து டெலிவரி ரூ.379 முதல் கிடைக்கிறது. 

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart)

இந்நிறுவனமும் இந்தியாவின் பல நகரங்களில் பூங்கொத்து வழங்கும் சேவையையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஜோடிக்கு வெறும் 20 நிமிடங்களில் பூக்களுடன் சாக்லேட்டுகள், பரிசுகள், கிரீட்டிங் கார்டுகள் ஆகியவற்றை அனுப்பலாம். 

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் சலுகையின் ஒரு பகுதியாக இந்த சேவை வழங்கப்படுவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 99 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச டெலிவரியையும் ஸ்விக்கி வழங்குகிறது.

பிளிப்கார்ட்  (Flipkart) 

பிளிப்கார்ட் நிறுவனம் மூன்று மணி நேரத்திற்குள்ளான பூங்கொத்து டெலிவரி சேவையை இந்தியா முழுவதும் கடந்த வாரமே அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் பயனர்கள் தங்கள் ஆர்டர்களை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளு. 

பிளிப்கார்ட் பயனர்கள் குறைந்தபட்சம் 249 ரூபாய்க்கான பொருள்களை வாங்கி ஆர்டரை மேற்கொள்ள வேம்டும். இந்தியாவின் முக்கிய நகரங்கள் உள்பட மொத்தம் 450 PIN CODE-களில் இந்தச் சேவை வழங்கப்படுவதாக பிளிப்கார்ட் தெரிவித்தது.

வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆர்டர்கள் நான்கு நேர இடைவெளியில் டெலிவரி செய்யப்படும். அதாவது, காலை 9 – 12 மணி, மதியம் 12 – 3 மணி, மாலை 3-6 மணி, மாலை 6 – 9 மணி ஆகிய நான்கு இடைவெளிகள் உள்ளன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.