பிளிப்கார்டில் Vivo V30… அடுக்கி நிற்கும் சிறப்பம்சங்கள் – விலை என்னவாக இருக்கும்?

Vivo V30 Series, Smartphones: ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது பலருக்கும் தேவையின் பொருட்டு வாங்குவதாகவே இருக்கும். தனக்கு ஏற்ற பேட்டரி, டிஸ்பிளே, ஸ்டோரேஜ், கலர் ஆகியவையை பொறுத்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க நினைக்கும் மொபைல்களை தேர்வு செய்வார்கள். குறிப்பாக, பட்ஜெட் என்பதும் இதில் முக்கியமான ஒன்றாகவும். தனக்கு ஏற்ற விலையில், தனக்கு பிடித்த நிறுவனத்தின் மொபைலை வாங்க பயனர்கள் விரும்புவார்கள். 

இதன் பேரில், சாம்சங், Redmi, Realme, OnePlus, Oppo, Vivo, iQOO போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்க இந்திய சந்தையில் பயனர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், அதே நேரத்தில் iPhone போன்ற பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களை வாங்கவும், மற்ற முன்னணி நிறுவனங்களின் Flagship மொபைல்களை வாங்கவும் தனி வாடிக்கையாளர்களே உள்ளனர். இவர்களுக்கு மொபைல்களின் விலை முக்கியமல்ல, அது வழங்கும் அம்சங்கள்தான் முக்கியமானவை. 

அந்த வகையில் பல வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்த Vivo நிறுவனத்தின் புதிய மொபைலான V30 சீரிஸ் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த Vivo மொபைலின் சீரிஸ் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சீரிஸில் Vivo V30 மற்றும் Vivo V30 Pro என்ற இரண்டு வேரியண்டில் வருகிறது. இந்த இரண்டு வேரியண்ட்களிலும் Zeiss கேமரா அமைப்பு உள்ளது. இதில் வலுவான பிராஸஸர், நீடித்த பேட்டரி, HD டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தாய்லாந்தில் இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது. 

Vivo V30 அறிமுக தேதியை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, மார்ச் மாதம் இந்த மொபைல் வெளிவரலாம் என கூறப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Vivo V30 Pro

MediaTek Dimensity 8200 சிப் செட், 13 ஜிபி RAM, 50MP மூன்று பின்புற கேமரா அமைப்பு ஆகியவை Vivo V30 Pro மொபைலில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்புறத்திலும் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5000mAh பேட்டரியுடன் அதிவேக சார்ஜிங் வசதியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Vivo V30

Vivo V30 மொபைல் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD AMOLED வளைந்த டிஸ்பிளே உள்ளது. இதன் Refresh Rate 120Hz ஆக உள்ளது. குறிப்பாக, Snapdragon 7 Gen 3 பிராஸஸர் மூலம் இயங்குகிறது. இதில் 50MP+50MP+2MP என மூன்று கேமரா அமைப்பு உள்ளது. Vivo நிறுவனம் சமீபத்தில்  Vivo Y100t 5ஜி மொபைலை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

Enhance your portrait experience with ZEISS triple main camera and ZEISS Style Portrait.​

​Know more https://t.co/yMYvYk59c4#BeThePro #DesignPro #PROtraits #vivoV30Series pic.twitter.com/SQi20YfeZW

— vivo India (@Vivo_India) February 24, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.