Darjeeling BJP MLA writes letter to PM in blood to remind him of his promise | பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய பா.ஜ., எம்எல்ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‛‛ கூர்காக்களுக்கு நீதி வழங்க வேண்டும் ”, எனக்கூறி, பிரதமர் மோடிக்கு டார்ஜலிங் தொகுதி எம்.எல்.ஏ., ரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்காக்கள் வசிக்கும் மலைப்பகுதியை தனியாக பிரித்து மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியினர் கடந்த 1980 முதல் போராடி வருகின்றனர். கடந்த 2017ல் தொடர்ச்சியாக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2019ல் மலைப்பகுதியில் வசிக்கும் 11 சமுதாய மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும் எனவும், நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் எனவும் பா.ஜ., தெரிவித்தது. அதேநேரத்தில் மாநிலத்தை பிரிப்பதற்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், டார்ஜலிங் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., நீரஜ் ஜிம்பா பிரதமர் மோடிக்கு ரத்தத்தினால் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: ‛‛ கூர்க்கா பகுதி மக்களின் பிரச்னையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர எனது ரத்தத்தினால் இந்த கடிதத்தை எழுதுகிறேன். கூர்க்காக்களின் பிரச்னைகளுக்கு அரசியல் நிரந்தரத்தீர்வுக் கண்டறியப்படும், 11 சமுதாய மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

லடாக், காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து மக்களின் பிரச்னைகள் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், கூர்க்கா மக்களின் பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.